உடல் எடை சட்டென குறைய தூங்கும் முன் இதை மட்டும் செய்யுங்கள்

Thu, 15 Feb 2024-4:37 pm,
Paschimottanasana

பச்சிமோத்தாசனம்: முதலில் இரண்டு கால்களையும் முன்நோக்கி நேராக நீட்டி பாதங்களையும் ஒட்டி வையுங்கள். மூச்சை இழுத்து கொண்டு கைகளை மேலே உயர்த்தி மீண்டும் லேசாக மூச்சை விட்டுக் கொண்டே கால் பாதங்களைத் தொட முயற்சிக்கவும்.

 

Supta Baddha Konasana

சுப்த பத்தா கோனாசனா: பின்புறமாக படுத்து, முழங்கால்களை வளைத்து, கால்களை ஒன்றாக இணைக்கவும். முழங்கால்களை பக்கவாட்டில் இறக்கி வைத்து உங்கள் கைகளை வயிற்றில் அல்லது உங்கள் இரு பக்கங்களில் வைக்கவும். பின்னர் ஆழமாக மூச்சை இழுத்து வெளியிடவும்.

Viparita Karani

விபரீதகரணி: சுவருக்கு எதிரில் பக்கவாட்டாக உட்கார்ந்து, கால்களை சுவருடன் நீட்டவும். பின்னர் கால்களை மேலே ஸ்விங் செய்து, பின்புறமாக படுக்கவும். இதை சுவருக்கு எதிராக வைக்கவும். உங்கள் கைகளை பக்கவாட்டில் தளர்த்தி ஆழமான சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.

பாலாசனம்: கால்விரல்களை ஒன்றாகவும், முழங்கால்களை இடுப்பு அகலமாகவும் வைத்துக்கொண்டு உடற்பயிற்சி பாயில் முட்டி போட்டு இருக்கவும். உங்கள் முழங்கால்களுக்கு இடையில் உடற்பகுதியைக் வைத்து, கைகளை முன்னோக்கி கொண்டு செல்லவும். இதையடுத்து உங்கள் பக்கவாட்டில் ஓய்வெடுக்கவும். உங்கள் நெற்றியை மேட்டின் மீது வைத்து ஆழமாக சுவாசிக்கவும், உங்கள் முதுகெலும்பை நீட்டி, தளர்வையும் ஊக்குவிக்கவும்.

அதோ முக சவனாசனம்: உங்கள் கைகளை முட்டிக்கு நேராக வைத்து குனியவும். இடுப்பு மேல் நோக்கி உயர்த்தவும். கால்களை நேராக வைத்து முட்டியை கொஞ்சமாக மடிக்கவும். இதனால் முதுகு விரிவடையும். கைகளை மேட்டின் மீது விரித்து வைத்து உங்கள் உடலை நீட்டமாக வைக்கவும். 

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link