குருவின் அருளால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள்...! எப்போது இருந்து தெரியுமா?

Wed, 01 Mar 2023-11:10 pm,

அவர்களுக்கு பணம் உள்ளிட்ட அனைத்து பலன்களும் வந்து சேரும். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டால் சொத்து சேரும்.

 

ஏப்ரல் 29, 2023 முதல் 3 ராசிகளுக்கும் பிரத்யேக பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். 

 

கடக ராசி:

ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு உதயினால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகம் கடக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் வெற்றியை தரும். நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த வேலையில் சலுகையைப் பெறலாம். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

தனுசு ராசி:

தனுசு ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ் ராஜயோகம் பெரும் பலன்களைத் தரும். இவர்களுக்கு எங்கிருந்துதாவது திடீரென பண வரவு கிடைக்கும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், இப்போது அதைத் திரும்பப் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் பலம் இருக்கும். சொத்து-வாகனம் வாங்கலாம்.

மீன ராசி:

மீன ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் மிகவும் சாதகமாக இருக்கும். இவர்களுக்கு, ஹன்ஸ் ராஜயோகம் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் முன்னேற்றத்தை தரும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். பணம் பெற புதிய வழிகள் அமையும். தொழிலில் ஒரு பெரிய ஆர்டரைப் பெறலாம். இருப்பினும், ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படலாம், எனவே ஆரோக்கியத்தை கவனித்து கொள்ளுங்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link