பிரியங்காவால் பாதிக்கப்பட்ட அந்த ஐந்து பேர் யார்?

Thu, 19 Sep 2024-3:55 pm,

எந்த டிவியாக இருந்தால் தற்போது யார் ட்ரெண்டிங்கில் இருக்காங்க? யார் மூலமா டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கிறது? என்பதை மனதில் வைத்து முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தனது திறமையால் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. (Photo: Instagram)

காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலமா ஒட்டுமொத்த மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்த திவ்யதர்ஷினி விஜய் டிவியின் பில்லர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். ஆனா பிரியங்கா வந்த பிறகு டிடி மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததால், வெளியேறிவிட்டார். (Photo: Instagram)

மா.கா.பா.ஆனந்த்துடன் சேர்ந்து விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தவர் தான் பாவனா. ஆனால் முதன்முறையாக பிரியங்கா இதில் நுழைந்த பிறகு பாவனாவுக்கு சரியான வாய்ப்பு கொடுக்காமல் டம்மி ஆக்கியதால், உங்க சங்காத்தமே வேண்டாம் என்று சொல்லி விஜய் டிவியை விட்டே பாவனா விலகிட்டாங்க. அவங்க தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்ல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிட்டு இருக்காங்க. (Photo: Instagram)

ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை ஜாக்குலின் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் அங்கையும் பிரியங்கா நுழைய, மெது மெதுவாக ஜாக்குலினின் வாய்ப்பு குறைந்தது. ஒரு கட்டத்தில் ஜாக்குலின் டீசன்ட்டாக ஒதுங்கிட்டாங்க. (Photo: Instagram)

கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் மற்றும் கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிட்டு வந்தவிங்க ரம்யா சுப்பிரமணியன். மறுபுறம் பிரியங்காவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், பிரியங்காவிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதால், ரம்யா சேனலை விட்டே விலகி சென்றார். (Photo: Instagram) 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மணிமேகலை மற்றும் அதே நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுள் ஒருவராக வந்த பிரியங்காவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் எனக்கூறி வெளியேறினார். (Photo: Instagram) 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link