டிரம்பின் அமைச்சரவையில் முக்கிய இடம் பிடித்த இந்தியர்! யார் இந்த விவேக் ராமசாமி?
கடந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப். டிரம்பின் வெற்றிக்கு எலோன் மஸ்க் முக்கிய பங்காற்றினார் என்று கூறப்பட்டது.
தற்போது அமெரிக்கா அரசின் திறன் துறைக்கு எலான் மஸ்க் தலைமை தங்குவார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அவருடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமியும் தலைமை தாங்குவார்.
"இந்த இரண்டு அமெரிக்கர்களும் (மஸ்க், விவேக்) சேர்ந்து அரசின் அதிகாரத்தை சரி செய்வதற்கும், அதிக விதிமுறைகளை குறைப்பதற்கும், செலவுகளை குறைப்பதற்கும், நிர்வாகத்தை மறுசீரமைப்பதற்கும் உதவுவார்கள்" என்று டிரம்ப் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் போட்டியாளரான கமலா ஹாரிஸை 69 தேர்தல் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விவேக் ராமசாமி மற்றும் மஸ்க் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அங்கம் வகித்தனர். இவர்களது தேர்தல் வியூகங்கள் டிரம்ப் வெற்றிக்கு உதவியது.
கோடீஸ்வரரான விவேக் ராமசாமி பயோடெக் துறையில் அதிக லாபம் பார்த்து வருகிறார். Roivant Sciences என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பொருளாதார தத்துவத்தை மையமாக வைத்து அரசியலில் நுழைந்தார்.