FIFA World Cup 2022 Awards : முக்கிய விருதுகளை வென்றது யார்... யார்?
இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் அடித்து, பெனால்டியிலும் கோல் அடித்து பிரான்ஸை தூக்கி சுமந்த இம்பாப்பே, அதிக கோல்களை அடித்தவர்களுக்கு வழங்கப்படும் கோல்டன் பூட் விருதை வென்றார். மொத்தம் 8 கோல்கள் அடித்து இம்பாப்பே சாதனை படைத்துள்ளார்.
கோல்டன் பால் விருது ஒட்டுமொத்தமாக தொடரில் சிறப்பாக விளையாடிவருக்கு வழங்கப்படும். இம்முறை லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். மெஸ்ஸி, இந்த தொடரில் 7 கோல்கள் அடித்து, 3 அசிஸ்ட் செய்துள்ளார். 2014 உலகக்கோப்பை கோல்டன் பால் விருதையும் மெஸ்ஸி வென்றிருந்தார். இதன்மூலம், உலகக்கோப்பையில் இரண்டு முறை இந்த விருதை பெற்ற ஒரே வீரர் மெஸ்ஸிதான்.
கோல்டன் கிளவ் விருது சிறந்த கோல் கீப்பருக்கு வழங்கப்படும். இம்முறை கோப்பையை வென்ற அர்ஜென்டினாவின் கோல் கீப்பர் மார்டினெஸ் அந்த விருதை வென்றார். மொத்தம் 23 கோல்களை தடுத்தது மட்டுமின்றி, இறுதிப்போட்டியின் பெனால்டியில் பிரான்ஸின் இரண்டு கோல் கிக்கை முறியடித்து, கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
21 வயதான அர்ஜென்டினா வீரர் என்ஸோ ஃபெர்னான்டஸ் சிறந்த இளம் வீரர் விருதை வென்றுள்ளார்.