நிஸான் பேட்ரோல் எஸ்யூவி காருக்கு இவ்வளவு மவுசா? சல்மான் கான் முதல் ஷாருக்கான் வரை விரும்புக் கார்!
புல்லட்-ப்ரூஃப் கார் வாங்க நினைப்பவர்களின் முதல் தேர்வு, நிஸான் பேட்ரோல் காராக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அதிலும், நடிகர் சல்மான் கானிடம் ஏற்கனவே அதே கார் ஒன்று இருக்கும் நிலையில், மீண்டும் அதே காரை வாங்குவது ஏன்? பாதுகாப்பு தவிர வேறு எதுவும் இல்லை.
அக்டோபர் 12ஆம் தேதி மஹாராஷ்டிராவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாபா சித்திக், மும்பையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை அடுத்து, பாபா சித்திக்கின் நண்பரான நடிகர் சல்மான் கான் தனது பாதுகாப்பை அதிகப்படுத்துகிறார்
பாபா சித்திக்கை கொலை செய்த கும்பல் கடந்த சில வருடங்களாக நடிகர் சல்மான் கானையும் கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுவதன் பின்னணியில் பாதுகாப்பான காரை சல்மான் கான் வாங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது
குண்டு துளைக்காத நிசான் பேட்ரோல் எஸ்யூவி காரை, சல்மான்கான் துபாயில் இருந்து இறக்குமதி செய்கிறார். இந்த கார் இந்திய சந்தையில் கிடைக்காததால், இறக்குமதி செய்கிறார்
துபாயில் இருந்து கப்பல் வழியாக மும்பைக்கு இந்த காரை கொண்டுவர சல்மான் கான் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இந்தியாவில் நிஸான் பேட்ரோல் கார் விற்பனையில் இல்லை
₹ 2 கோடி மதிப்பிலான புல்லட் புரூஃப் நிசான் பேட்ரோல் எஸ்யூவி பாதுகாப்புக்கு மிகவும் சிறந்தது என்று சொல்ல காரணமான சிறப்பு அம்சத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். காருக்கு அருகில் எங்காவது வெடிபொருட்கள் இருக்கிறதா என்பதைக் கூட சொல்லக்கூடிய இண்டிகேட்டர் இதில் இருப்பதால், பாதுகாப்பை கணிசமாக அதிகரிக்க இந்த கார் உதவும்.
இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு நடிகர் சல்மான் கானுக்கும் அவரது தந்தை சலீம் கானுக்கும் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மற்றொரு குண்டு துளைக்காத காரை இறக்குமதி செய்தார்.
பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை