நிஜ வாழ்விலும் அவர் வாரி வழங்கிய சின்ன கவுண்டர்தான்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Thu, 28 Dec 2023-10:51 am,

கேப்டன் விஜயகாந்தின் திரைப்பட வாழ்க்கை: இயக்குநர் காஜா 'விஜயராஜ்' என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார். திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். 

 

திருப்புமுனையாக அமைந்த தூரத்து இடிமுழக்கம்: விஜயகாந்தின், தூரத்து இடிமுழக்கம் திரைப்படம் வெற்றிபெறும் வரையில் விஜயகாந்த் எதிர்கொண்ட விமர்சனங்கள் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத எதிர்மறை விமர்சனங்கள். எல்லா விமர்சனங்களையும் கடந்து வெற்றி பெற்று தன்னுடன் வெற்றிக்காக போராடியவர்கள் அத்தனை பேரையும் தோளோடு தோள் கொடுத்து தூக்கி விட்டது விஜயகாந்தின் சிறப்பு.

 

விஜயகாந்த கேப்டனாக உருவான கதை: இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம் தான் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியைத் தந்தது.

 

அனைத்து தரப்பிற்கும் உணவில் பேதம் போக்கிய சொக்கத்தங்கம்: சினிமாவில் பெரும் முயற்சிக்குப் பிறகு நுழைந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த் உதவி இயக்குனர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கி வந்தார். அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்தில் அனைத்து தரப்பிற்கும் ஒரே உணவு என்பது விஜயகாந்தின் நோக்கம். அதன்படி அனைவருக்கும் அசைவம் கிடைக்கும் வகையில் விஜயகாந்த் செய்த சமபந்தி என்பது அன்றைய காலத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்க செய்தது விஜயகாந்தின் நல்ல மனது.  

 

நடிகர் சங்கத்தின் தலைவர்: நடிகர்களின் வாழ்க்கை செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் சங்கத்தின் தலைவராக செயல்பட்டார். அவருடைய காலகட்டத்தில் நடிகர் சங்கத்தின் மீது இருந்த கடன் அடைக்கப்பட்டன. அதேபோல் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பல உதவிகள் செய்தார் விஜயகாந்த்.

 

ஏழை மாணவர்களுக்கு இலவச சீட்: நடிப்பு தவிர செங்கல்பட்டு அருகே தன்னுடைய தாய் தந்தை பெயரில் ஆண்டாள் அழகர் என்ற கல்லூரி தொடங்கினார். அதில் அதிகம் மதிப்பெண் பெறும் ஏழை மாணவர்களுக்கு இலவச சீட் வழங்கி படிக்க வைத்தார். தன்னுடைய பிறந்தநாளில் ஏழைகளுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link