பிரபலங்கள் ஏன் அதிகமாக விவாகரத்து செஞ்சுகிறாங்க தெரியுமா? 8 முக்கிய காரணங்கள்

Mon, 09 Sep 2024-2:05 pm,

எப்போதும் திரைக்கு முன்:

பிரபலங்கள், எப்போதும் கேமராவின் கண்களிலேயே இருப்பர். இதனால், வெளியில் செல்லும் போது எப்படி நடந்து கொண்டாலும் ஏதேனும் பிரச்சனை வரும். இது, அவர்களின் உறவில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால், அவர்களின் உறவுக்குள் விரிசல் ஏற்படலாம்.  (படத்தில்: கமல்ஹாசன், சரிகா, கௌதமி)

பிஸியான அட்டவணைகள்:

கொஞ்சம் மேல்தட்டில் இருக்கும் பிரபலங்கள் அதிக நேரம் வேலை பார்க்கும் நிலை ஏற்படலாம். இதனால், அவர்களின் பார்ட்னருடன் அவர்களால் நேரம் செலவிட முடியாமல் போகலாம். இது அவர்களுக்குள் பெரிய பிரிவை ஏற்படுத்தலாம் . 

(படத்தில்: செல்வராகவன், சோனியா அகர்வால், கீதாஞ்சலி)

வாழ்க்கை முறை:

திரை பிரபலங்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் பார்ட்னருக்கும் வெவ்வேறு வாழ்க்கை முறை இருக்கலாம். அவர்கள் பழகும் நண்பர்கள், அவர்களுக்கு பிடித்தவை-பிடிக்காதவை, முக்கியத்துவங்கள் போன்றவை வேறுபடுவதால், பிரச்சனை ஏற்படலாம். 

(படத்தில்: ஏ.எல்.விஜய், ஐஸ்வர்யா, அமலா பால், ஜகத் தேசாய்)

நிதி மேலாண்மை:

நிதி மேலாண்மை இதில் பெரும்பங்காற்றலாம். பணத்தை செலவழிக்கும் பழக்கம், எதற்கு செலவு செய்ய வேண்டும் என்று தெரியாமல் போவது போன்றவற்றால் பிரச்சனை வரலாம். 

(படத்தில்: ஜிவி. பிரகாஷ்-சைந்தவி)

புகழால் வரும் அழுத்தம்:

ஒருவருக்கு பெயர், பணம், புகழ் வரும் போது வாழ்க்கை எந்த வகையில் வேண்டுமானாலும் திசை மாறலாம். பொது வெளியில், மக்கள் மத்தியில் “இப்படித்தான்” நடந்து கொள்ள வேண்டும் என்று செலிபிரிட்டிகள் அவர்களின் பார்ட்னரையும் நிர்பந்திப்பதால் விவாகரத்துக்கான சண்டைகள் ஏற்படலாம். 

(படத்தில்: சமந்தா, நாக சைதன்யா, சோபிதா துலிபலா)

உண்மைத்தன்மை இல்லாதது:

செலிப்ரிட்டிகள் பலரின் திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கு காரணமாக இருப்பது, ஒருவரிடத்தில் இன்னொருவர் உண்மையாக இல்லமால் இருப்பதுதான். தனது மனைவிக்கு தெரியாமல் கணவனோ, கணவனுக்கு தெரியாமல் மனைவியோ வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்துக்கொள்வதாலும் செலிபிரிட்டி விவாகரத்து நடக்கும். 

(படத்தில்: தனுஷ்-ஐஸ்வர்யா)

இணக்கமின்மை:

ஒரு உறவு வளர வேண்டும் என்றால் அங்கு இணக்கம், புரிதல் போன்ற விஷயங்கள் தேவைப்படும். ஆனால், ஒரு மனிதர், தனிப்பட்ட நபராக வளரும் போது அவருக்கு ஒரு சில விஷயங்கள் குறித்து புரிதல் ஏற்படலாம், ஏற்படாமல் போகலாம். இதனால், உறவில் இணக்கமின்மை ஏற்படுகிறது. இதுவும் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

(படத்தில்: ஜெயம் ரவி-ஆர்த்தி)

யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள்:

பிரபலங்கள் பலர் மீது, இந்த சமூகம் பெருத்த எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறது. இது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கலாம். அவர்களுக்கு வரும் பார்ட்னரும் இதே போன்ற யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளை வைத்திருப்பவர்களாக இருந்தால், அந்த திருமணம் விவாகரத்தில்தான் முடியும். 

(படத்தில்: ஜெயம் ரவி-ஆர்த்தி)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link