தோனி மாதிரி... சுனில் நரைனை Uncapped வீரராக கேகேஆர் வாங்க முடியாது... ஏன் தெரியுமா?
ஐபிஎல் 2025 மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) விதிகள் மற்றும் வீரர்களை தக்கவைக்கும் விதிகள் கடந்த செப். 28ஆம் தேதி வெளியானது. மொத்தம் 6 வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம். ஏலத்திற்கு முன்னரே தக்கவைக்கலாம் அல்லது ஏலத்தில் RTM பயன்படுத்தியும் தக்கவைக்கலாம்.
அதேபோல், 6 வீரர்களில் அதிகபட்சம் 5 Capped வீரர்களையும், அதிகபட்சம் 2 Uncapped வீரர்களையும் ஒரு அணி தக்கவைக்கலாம். எனவே, குறைந்தபட்சம் 3 Capped, 1 Uncapped வீரர்களை தக்கவைத்தே ஆக வேண்டும்.
ஏலத்திற்கு முன் நீங்கள் வீரர்களை தக்கவைத்தால் முதல் ஸ்லாட்டில் ரூ. 18 கோடி, 2வது ஸ்லாட்டில் ரூ. 14 கோடி, 3வது ஸ்லாட்டில் ரூ.11 கோடி, 4ஆவது ஸ்லாட்டில் ரூ.18 கோடி, 5வது ஸ்லாட்டில் ரூ.14 கோடி என 5 வீரர்களுக்கே நீங்கள் 75 கோடியை ஒதுக்க வேண்டும்.
இதில் Uncapped வீரருக்கான ஸ்லாட்டில் ரூ.4 கோடியையும் சேர்த்தால் மொத்த ஏலத்தொகை ரூ.120 கோடியில் ரூ.79 கோடி செலவாகிவிடும். மீதம் உள்ள ரூ.41 கோடியில்தான் மொத்த அணியையும் கட்டமைக்க வேண்டும்.
எனவே, பல அணிகள் முழுமையாக ஏலத்திற்கு முன்னர் 6 வீரர்களை தக்கவைக்கப்போவது இல்லை. அதிகபட்சம் முதல் மூன்று ஸ்லாட்களையும், கடைசி Uncapped ஸ்லாட்டையும் பயன்படுத்தும்.
அந்த வகையில், நடப்பு சாம்பியன் கேகேஆர் அணி ஷ்ரேயாஸ் ஐயர், ரின்கு சிங், பில் சால்ட், சுனில் நரைன், ரஸ்ஸல் ஆகிய 5 Capped வீரர்களை தக்கவைக்கலாம். வைபவ் அரோராவை Uncapped வீரராக தக்கவைக்க முயற்சிக்கும்.
இதில் ரின்கு சிங், சுனில் நரைன், வைபவ் அரோரா மட்டுமே ஏலத்திற்கு முன்னர் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது. மற்ற 6 வீரர்களையும் கேகேஆர் RTM பயன்படுத்தி தக்கவைக்க வாய்ப்புள்ளது. வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி ஆகியோரை தக்கவைக்க வாய்ப்பில்லை. ஏலத்தில் முட்டிமோதி எடுக்கலாம்.
இதில் ரின்கு சிங் அதிக தொகையில் தக்கவைக்கப்படலாம். வைபவ் அரோராவுக்கு ரூ. 4 கோடி கொடுக்கப்படும். இதில் சுனில் நரைனை தற்போது கொண்டுவரப்பட்டுள்ள விதியின்படி Uncapped வீரராக தோனியை போன்று எடுக்கலாமே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த விதி கடைசி 5 வருடங்களில் சர்வதேச போட்டியை விளையாடாத இந்திய வீரர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.