தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கம் வாங்குவது ஏன் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது

Tue, 29 Oct 2024-6:06 pm,

இந்து கலாச்சாரத்தில், தங்கம் செல்வத்தின் அடையாளம் மட்டுமல்ல, தூய்மையின் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. தீபாவளி நாளில் தங்கம் வாங்குவதால், லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

தீபாவளி நாளில் தங்கம் வாங்குவது என்பது கலாச்சார பாரம்பரியம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் கலவையாகும். தீபாவளி நாளில் கடவுள் லட்சிமிக்கு பூஜை செய்வதால், தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 

தந்தேராஸ் மற்றும் தீபாவளியின் போது தங்கம் வாங்குவது இந்து மதத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஐந்து நாள் திருவிழாவாக கொண்டாப்படும் தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கம் வாங்குவதற்கான ஒரு நல்ல நேரமாக கருதப்படுகிறது. 

தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கம் வாங்குவது குடும்பத்தில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள்.

தீபாவளி பண்டிகையை அடுத்து வரவிருக்கும் நாட்கள் நல்ல செழிப்பாக ஆசீர்வாதத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக தங்கம் வாங்குவதை ஒரு வழக்கமாக மக்கள் கொண்டுள்ளனர். மறுபுறம் தங்கம் ஒரு நிலையான பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கத்தை நகைகளாக, நாணயங்களாக அல்லது தங்கத்தில் முதலீடு செய்வது என பல்வேறு வடிவங்களில் தங்கத்தை வாங்குவதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாக கருதப்படுகிறது. மேலும் டிஜிட்டல் தங்கத்தையும் வாங்கலாம்.

கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகள் மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம். இது தவிர, எம்எம்டிசி பிஏஎம்பி (MMTC-PAMP) இந்தியா பிரைவேட். லிமிடெட், டிஜிட்டல் கோல்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Digital Gold India Pvt Ltd Augmont Gold Ltd) போன்ற நிறுவனங்களில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம்.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை

- புதுடெல்லி: ரூ 7,390 - மும்பை: ரூ.7,375 - கொல்கத்தா: ரூ.7,375 - சென்னை: ரூ.7,375

இங்கே கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் நம்பிக்கை மற்றும் முதலீடு தரவுகள் அடிபப்டையிலானது. இதற்கும் Zee News Tamil சேனலுக்கு சம்பந்தம் இல்லை. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவேடுங்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link