பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை ஏன் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்?
பிளாஸ்டிக் பாட்டிலில் வைக்கப்படும் தண்ணீரை குடிக்கும் ஆண்களுக்கு ஹார்மோனில் பிரச்சனை ஏற்படுகிறது, ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு மற்றும் சீக்கிரமே பெண்கள் பருவமடைதல் போன்றவற்றை ஏற்படுத்திவிடுகிறது.
மைக்ரோ பிளாஸ்டிக்குகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மலட்டுத்தன்மை மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில் வெயிலில் இருக்கும்போது மைக்ரோபிளாஸ்டிக்கை தண்ணீரில் வெளியிடுகிறது, இதனை குடிப்பது ஆபத்தானது.
பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை பலரும் பயன்படுத்துகிறோம், இதனால் உங்கள் உடலில் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது சுற்றுசூழலும் பாதிப்படைகிறது.