NITI Aayog: 2023ல் `வளர்ச்சியடைந்த இந்தியா@2047` இலக்கில் கல்வித்துறையின் முக்கியத்துவம்
இந்தியாவை வளர்ந்த பொருளாதாரமாக மாற்றும் 'பார்வை திட்டம்' 'வளர்ச்சியடைந்த இந்தியா@2047' என்ற இலக்குக்கான 10 பிராந்திய கருப்பொருள் அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து கூட்டு தொலைநோக்கு ஆவணத்தை தயாரிக்கும் பணி NITI ஆயோக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை சுமார் 3,000 பில்லியன் டாலர் வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாற்ற தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (CEO) பிவிஆர் சுப்பிரமணியம், அதன் முக்கியத்துவத்தை கோட்டிட்டு காட்டினார்
2047-ஆம் ஆண்டுக்குள் நாடு வளர்ந்த நாடாக மாறத் தேவையான நிறுவன மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்களை கோடிட்டுக் காட்டும் வகையில் விஷன் இந்தியா@2047 திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது
கல்லூரியில் படிக்கும் இளைஞர்களின் சேர்க்கை விகிதத்தை 27 சதவீதத்தில் இருந்து 50-60 சதவீதமாக உயர்த்த வேண்டும்
பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியில் இருந்து எட்டு - ஒன்பது கோடியாக உயரவேண்டும்
தற்போதுள்ள பல்கலைக்கழகங்களைத் தவிர, ஆயிரக்கணக்கான புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும்
இந்தியாவின் மக்கள்தொகை திறனைப் பயன்படுத்திக் கொள்ள 25 ஆண்டுகள் உள்ள நிலையில், இந்தியா உலகத் தலைவராக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வியை முடிக்க இந்தியாவிற்கு வெளியே செல்வதால், இந்தியா, உலகின் மிகப்பெரிய தொழிலாளர் வழங்குநராக மாறப்போகிறது. எனவே, இந்தியாவில் கல்லூரி படிப்பை ஊக்குவிக்கவேண்டும் என நீதி ஆயோக் வலியுறுத்துகிறது