Wine: ‘மது’ பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!!

Thu, 09 Sep 2021-5:29 pm,

இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், மது அருந்துவதால் இதயத்தை நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்று தெரியவந்துள்ளது. திராட்சையில் உள்ள சத்துக்கள் காரணமாக, ரெட் மற்றும் வொயிட் ஒயின் இரண்டும் இதய தமனிகளுக்கு நன்மை பயக்கும்  என்பதால், இதய நோய்களைத் தடுக்க முடியும்.

காய்கறிகள் மற்றும் தானியங்களில் பாலிஃபினால்கள் (Polyphenols) மிக முக்கியமான கூறு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மதுவில் குறிப்பிடத்தக்க அளவு பாலிபினால்கள் உள்ளன, அதனால், அவை நன்மை பயக்கும். பாலிபினால்கள் நுண்ணுயிரிகளாகும், அவை பெரும்பாலும் தாவரங்களில் இயற்கையாகவே காணப்படுகின்றன. பழங்களில் 8,000 க்கும் மேற்பட்ட பாலிபினால்கள் உள்ளன. அவை காய்கறிகள் மற்றும் முழு தானியங்களில் காணப்படுகின்றன.

ஆங்லியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ருடால்ப் ஷுட்டே 446,000 பேரிடம் ஆராய்ச்சி செய்தார். இந்த ஆராய்ச்சியில், மது அருந்துபவர்களுக்கும்  அருந்தாதவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பீடு செய்யப்பட்டது. இதன் பிறகு வந்த ஆராய்ச்சி முடிவுகள் இங்கிலாந்து பயோ-பேங்க் தரவுத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதய நோய் மற்றும் ஒயின் அருந்துதல் ஆகியவற்றுக்கு இடையே ஒரு திட்டவட்டமான தொடர்பு இருப்பதாக ஆங்கிலியா ரஸ்கின் கூறியதை சன் மேற்கோள் காட்டியது. இரண்டு வகையான ஒயினும் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் ஆல்கஹால் இல்லாத ஒயின் மட்டுமே நன்மை பயக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒயினில் பாலிபினால்கள் அதிகம் காணப்படுகின்றன. ஆனால், அதிகப்படியான ஆல்கஹால் இதயத்தை பாதிக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link