வெறும் ₹9 என்ற விலையில் LPG சிலிண்டர் கிடைக்குமா; ஆம்.. என்கிறது Paytm

Wed, 21 Apr 2021-3:11 pm,

LPG சிலிண்டர் விலை அதிகரித்துள்ள நினையில், அனைவரும் சந்தோஷம் அடையும் வகையில் பேடிஎம் (Paytm) ஒரு அசத்தலான ஆஃபரை கொண்டு வந்துள்ளது. அந்த ஆஃபரை பயன்படுத்திக் கொண்டு பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

டிஜிட்டல் பரிவர்த்தனை ( Digital Transaction) செயலியான Paytm மூலம் முதல்முறையாக LPG சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது  உங்களுக்கு 800 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும்.  இந்த சலுகை ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும்.சிலிண்டர் முன்பதிவுக்கு Paytm வழங்கியுள்ள சலுகையில் சில நிபந்தனைகளும் அடங்கியுள்ளன.

முதன்முறையாக எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்து Paytm மூலம் பணம் செலுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். வாடிக்கையாளருக்கு ரூ.800 கேஷ்பேக்கிற்கான (cashback)   ஒரு ஸ்க்ராட்ச் கார்டு (scratch card) கிடைக்கும். இந்த சலுகை முதல் எல்பிஜி சிலிண்டரின் முன்பதிவுக்கு  பொருந்தும்

இந்த சலுகை குறைந்தபட்சம் ரூ .500 செலுத்தும் போது தான் கிடைக்கும். கேஷ்பேக்கிற்கு, நீங்கள்  ஸ்க்ராட்ச் கார்டை ஓபன் வேண்டும்.  நீங்கள் பில் கட்டணம் செலுத்திய பிறகு கேஷ் பேக் கிடைக்கும். கேஷ்பேக் தொகை ரூ .10 முதல் ரூ .800 வரை இருக்கலாம். இந்த ஸ்ராட்ச் கார்டை (scratch card), 7 நாட்களுக்குள் ஓபன் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் அதைப் பயன்படுத்த முடியாது

உங்கள் மொபைல் தொலைபேசியில் Paytm செயலியை சிலிண்டரை முன்பதிவு செய்யுங்கள். ஒரு சிலிண்டரை பதிவு செய்வதற்கான ஆப்ஷனில் உங்கள் எரிவாயு சப்ளையரை தேர்ந்தெடுக்கவும்.  முன்பதிவு செய்வதற்கு முன், நீங்கள் FIRSTLPG  என்ற விளம்பர குறியீட்டை உள்ளிட வேண்டும். முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் கேஷ்பேக் ஸ்க்ராட்ச் அட்டை கிடைக்கும். இந்த ஸ்ராட்ச் கார்டை7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link