Glaucoma: குளுக்கோமா நோய் வராமல் தடுக்க வழிகள்! கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க டிப்ஸ்!
கிளௌகோமாவின் அபாயத்தைக் குறைப்பதற்கும், கண் பார்வையைப் பாதுகாப்பதற்கும் சில அடிப்படை விஷயங்களை கடைபிடித்தாலே போதும். குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கண் பராமரிப்பு நிபுணரிடம் உங்கள் கண்களை பரிசோதித்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயது மற்றும் ஆபத்து காரணிகளைப் பொறுத்து மாறுபடும். பார்வையைப் பாதுகாக்கவும் பார்வை நரம்புக்கு மீளமுடியாத சேதத்தைத் தடுக்கவும் கிளௌகோமாவை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பது அவசியம்.
கிளௌகோமா பெரும்பாலும் பரம்பரையாக தொடர்கிறது. எனவெ, குடும்பத்தில் வேறு யாருக்கேனும் கிளெளகோமா இருந்தால், இதைப் பற்றி கண் மருத்துவரிடம் தெரிவிக்கவும், அதற்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஸ்கிரீனிங் பரிந்துரைகளை மருத்துவர் வழங்குவார்
உள்விழி அழுத்தம் (IOP) என்பது கிளௌகோமாவிற்கான முக்கிய ஆபத்துக் காரணியாகும். வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம் உங்கள் கண்ணின் அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிப்பது, உயர் அழுத்த அளவை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. இதனால் பார்வை நரம்பு சேதத்தை சரியான நேரத்தில் தடுக்கலாம்
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது, ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்திற்கும், கிளௌகோமாவை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சமச்சீரான உணவு மர்றும் வழக்கமான உடற்பயிற்சி, உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்
சூரியனில் இருந்து வரும் புற ஊதா (UV) கதிர்வீச்சு அடிக்கடி படும்போது தோல், கண் என உடல் உறுப்புகளை மோசமாக பாதிக்கும். எனவே வெயிலில் செல்லும்போது UVA மற்றும் UVB கதிர்களை 100% தடுக்கும் சன்கிளாஸ்களை அணிவது நல்லது.
கண் சுகாதாரத்தை முறையாக கடைபிடிப்பது அவசியம். கைகளை அடிக்கடி கழுவது நல்லது. அழுக்கு கைகளால் உங்கள் கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவும். லென்ஸ் பயன்படுத்துபவர்கள், அவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும். இது கண் நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், பார்வையைப் பாதிக்கக்கூடிய சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைகள் கிளௌகோமாவை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே கண் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ளவும்