World Kidney Day: சிறுநீரக கற்களால் ஏற்படும் பாதிப்பு என்ன; எப்படி சமாளிப்பது!

Thu, 11 Mar 2021-2:18 pm,

சிறுநீரக கற்கள், அல்லது சிறுநீரக கால்குலி என்பது வேதி படிகங்களாக உறுவாகி மனிதனை கொடிய வலிக்கு உட்படுத்துகிறது. சிறுநீரக கற்கள் பொதுவாக சிறுநீரகங்களில் உருவாகின்றன. எனினும், அவை உங்கள் சிறுநீர் பாதை வழியாக வளர்ந்து பின்வரும் உடல் உறுப்புகளை தாக்கலாம்.

சிறுநீரகங்கள் சிறுநீர்க்குழாய்கள் சிறுநீர்ப்பை சிறுநீர் வடிகுழாயிருப்பதால்

சிறுநீரக கற்கள் மிகவும் வலிமையான, வலியை உண்டாக்கும் மருத்துவ பிரச்சணை ஆகும். இந்த சிறுநீரக கற்களை உருவாக்கும் காரணிகள் பல வகையில் மாறுபடுகின்றன.

அனைத்து சிறுநீரக கற்கள் ஒரே படிகங்களால் உருவாக்கப்படவில்லை. பல்வேறு வகைகளில், பல்வேறு காரணங்களால் உறுவாக்கப்படுகிறது. சிறுநீரக கற்கள் உருவாவதற்கான காரணங்கள்...

1 - கால்சியம்

கால்சியம் கற்கள் மிகவும் பொதுவானவை. பெரும்பாலும் கால்சியம் ஆக்ஸலேட் (கால்சியம் பாஸ்பேட் அல்லது மெல்லட் இருப்பினும்) கொண்ட பொருட்களை உண்னுவதால் உருவாகின்றன. ஆக்ஸலேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த வகை கல்லை வளர்க்கும் ஆபத்தை குறைக்கலாம். உயர் ஆக்ஸலேட் உணவுகள் பின்வருமாறு:

உருளைக்கிழங்கு சிப்ஸ் வேர்கடலை சாக்லேட் பீட்ரூட் கீரை

2. யூரிக் அமிலம்

இந்த வகை சிறுநீரக கல் பெண்களை விட ஆண்களிடமே அதிகமாக காணப்படுகிறது. கீல்வாதம் கொண்டவர்கள் அல்லது கீமோதெரபி சிகிச்சையில் உள்ளவர்களுக்கு இந்த வகை கல் உருவாகலாம். சிறுநீர் மிகவும் அமிலமாக மாறும்போது இந்த வகை கல் உருவாகிறது. பியூரின்களில் நிறைந்த ஒரு உணவு சிறுநீரின் அமில அளவை அதிகரிக்கலாம். மீன், மட்டி மற்றும் இறைச்சிகள் போன்றவற்றில் உள்ள புரதங்கள் இதனை தடுக்க உதவுகிறது.

3. ஸ்டூரூவைட்

இந்த வகை கற்கள், கல்லீரல் சிறுநீர்த் தொற்று நோய்த்தொற்றுகளாக உருவாகிறது. பெண்களிடமே பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த கற்கள் பெரியதாக இருக்கும், எனவே சிறுநீர் கழிப்பதற்கு தடங்கல் ஏற்படுத்தலாம். 

4. சிஸ்டைன்

சிஸ்டின் வகை கற்கள் மிகவும் அரிதானவை. மரபணு கோளாறு சிஸ்டினுரியா கொண்டிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இவை வருகிறது. இந்த வகையிலான கல் (சிஸ்டைன் - உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு அமிலம்) சிறுநீரகத்திலிருந்து சிறுநீரில் இருந்து கசிந்து வழிகிறது.

சிறுநீரக கற்களை உறுவாக்கும் மிகப்பெரிய ஆபத்து காரணியாக கருதப்படுதவது.. நாளொன்றுக்கு ஒரு லிட்டர் அளவுக்கு குறைவாக சிறுநீர் கழிப்பது தான் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே சிறுநீரகக் கற்கள் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாக காணப்படுகிறது. இருப்பினும், சிறுநீரகம் கற்கள் பெரும்பாலும் 20 மற்றும் 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கே அதிகளவில் காணப்படுகிறது.

பல்வேறு காரணிகள் சிறுநீரக கற்கள் வளரலாம் என தெரிவித்த போதிலும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்களிடமே இந்த சிறுநீரகக் கற்கள் அதிகம் இருப்பதாகக் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல் வறட்சி உடல் பருமன் புரதம், உப்பு, அல்லது குளுக்கோஸின் அதிக அளவு கொண்ட உணவு ஹைபர்ப்பேரதிராய்டு நிலை இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்கும் அழற்சி குடல் நோய்கள் நீரிழிவு மருந்துகள், ஆண்டிசைசர் மருந்துகள் மற்றும் கால்சியம் அடிப்படையிலான அமிலங்கள் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது, போன்ற இதர பிரச்சணைகளும் சிறுநீறக கற்களை உண்டாக்கும்.

நீரிழிவு நோயாளிகள் மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் (NIDDK) சம்மேளத்தின் கருத்தின் படி பாலியல் ரீதியான உறவுகளும் இந்த சிறுநீரக கற்களை உண்டாக்கும் என தெரிவிக்கின்றது. இந்த வகையில் பெண்களை விட ஆண்களுக்கே அதிக அளவில் சிறுநீரக கற்கள் உண்டாகும் எனவும் தெரிகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link