In Pics: லட்சியத்துடன் தொடங்கி நிறைவேறா கனவாய் போன வரலாற்று கட்டிடங்கள்..!
பாங்காக்கில் உள்ள சாத்தோர்ன் யுனிக் டவர் (Sathorn Unique Tower, Bangkok) என்னும் இந்த 49 மாடி கோபுரம் பேய்களின் டவர் என பிரபலமாக அறியப்படுகிறது. இதன் 80 சதவீத கட்டுமானப் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. அதன் கட்டுமானம் 1990 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால், நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்ததால், 1997 ஆம் ஆண்டில் அதன் கட்டுமானம் பொருளாதார காரணங்களால் நிறுத்தப்பட்டது.
433 அடி கொண்ட சான் பெட்ரோனியோவின் பசிலிக்கா (Basilica of San Petronio) என்னும் கட்டிடத்தின் கட்டுமானம் 1390 இல் தொடங்கப்பட்டது. அதன் கட்டுமானம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த போதும் முடிக்கப்படாமல் உள்ளது.
ரியுக்யாங் ஹோட்டல் (Ryugyong Hotel), Hotel of Doom என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது வட கொரியாவின் மிக உயரமான கட்டிடமாகும். பியாங்யாங்கில் உள்ள இந்த கட்டிடம் தற்போதும் முடிவுறாத நிலையில் உள்ளது. 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல் 1992-ம் ஆண்டு 1080 அடி உயரத்தை எட்டியதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டிடம் கட்டும் பணி நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹோட்டல் அதன் திட்டத்தின்படி கட்டப்பட்டிருந்தால், அதில் 5 சுழலும் உணவகங்கள் மற்றும் 3000 அறைகள் இருந்திருக்கும்.
ஸ்காட்லாந்தில் உள்ள இந்த கட்டிடம் ஏதென்ஸின் பார்த்தீனானின் நகலாக கட்டப்பட இருந்தது. இந்த கட்டிடத்தின் கட்டுமானம் 1822 இல் தொடங்கியது. நெப்போலியன் போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக இது கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்திற்குப் போதிய நிதி திரட்ட முடியாததன் காரணமாக அதன் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. அதன் கட்டுமானம் 1829 இல் நிறுத்தப்பட்டது.
அலாய் மினார் கட்டிடத்தை குதுப்மினார் விட உயரமாக அமைக்கும் ஒரு திட்டம் இருந்தது, ஆனால் 1316 இல் அலாவுதீன் கில்ஜியின் மரணத்திற்குப் பிறகு, அலாய் மினார் வேலை நிறுத்தப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது.