ஆடியில் அடல்வல்லான் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! திருக்கோலங்களை தரிசித்தால் முக்தி!
சிவனுக்கு உரித்தான பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் அமைந்துள்ள இடங்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்...
உஜ்ஜைனில் 5 அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ள சிவன் கோயில் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் மகா காளேஷ்வாரரை கார்த்திகை மாத பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பானது.
காசி-ராமேஸ்வரம் என்று இந்த இரு ஜோதிர்லிங்கங்களையும் இணையாகவே சொல்வார்கள். உலகின் பழமையான நகரமான காசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் முக்கியமான சிவஸ்தலம் என்பதோடு, ஜோதிர்லிங்க தலமாகவும் இருக்கிறது.
காசியில் இருக்கும் கங்கை நீரை கொண்டு வந்து, ராமேஸ்வரத்தில் ஈசனுக்கு அபிஷேகம் செய்வது சிவனுக்கு பிடித்தமான அபிஷேகம் ஆகும். காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு சென்று வந்தால் பிறவிப்பிணி தீரும் என்று சொல்லும் அளவுக்கு ராமேஸ்வரத்திற்கு முக்கியத்துவம் உண்டு. சீதை மணலால் செய்த லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்த ராமேஸ்வரம் இது
மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ் பெற்ற சிவதலம் ஆகும். நந்தியே மலையாக இருந்து சிவனை தாங்கும் இந்தத் தலம் ஆந்திராவில் அமைந்துள்ளது
குஜராத்தில் கடற்கரையில் அமைந்துள்ள சோமநாதர் சிவாலயம் உலகப் புகழ் பெற்ற ஜோதிர்லிங்க தலம் ஆகும். சாபம் பெற்ற சந்திரன், இங்கு குடி கொண்டுள்ள சோமநாதரை வணங்கி சாப விமோசனம் பெற்ற தீர்த்த தலம் என்பதால், இங்கு திங்கட்கிழமை வரும் அமாவாசை நாளில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பானது.
ஓம்காரேஷ்வரர் சிவலிங்கம் சுயம்புலிங்கம். பாணாசுரன் பூஜித்து வந்த லிங்கங்களை நர்மதை நதியில் விட்டபோது அவை சாளக்கிராமங்களாக மாறிய சக்தி வாய்ந்த தலம் இது
மஹாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள திரியம்பகேஸ்வரர் ஆலயத்தில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கும் கருவறையில் எப்பொழுதும் நீர் சுரந்துக் கொண்டே இருக்கிறது. திருவண்ணாமலையைப் போல சிவனே மலையாக இருக்கும் தலங்களில், த்ரையபகேஷ்வர் தலமும் ஒன்று
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கிருஷ்ணரின் துவாரகைக்கு அருகில் அமைந்துள்ள நாகேஸ்வரர் கோயில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.
அன்னை பார்வதி சிவபெருமானை குங்குமப்பூவால் வழிபட்ட தலம் குஸ்ருணேஸ்வரர் ஆகும். ஜோதிர்லிங்கங்க தலங்களில், கேதாரேஸ்வரர், மகாராஷ்டிரம் பீம சங்கரர், ஜார்கண்ட் வைத்தியநாதர் ஆகிய தலங்களும் அடங்கும்