6 பந்துகளில் 77 ரன்கள் விட்டுக்கொடுத்த மிக மோசமான பவுலர் - கிரிக்கெட் சுவாரஸ்யம்
கிரிக்கெட் விநோதங்களில் ஒன்றாக நியூசிலாந்து பவுலர் பெர்ட் வான்ஸ் என்ற பிளேயர் 5 பந்துகளில் 77 ரன்கள் கொடுத்த மிக மோசமான பவுலராக கிரிக்கெட் வரலாற்றிலும் (Worst Bowler in Cricket History) இடம்பெற்றிருக்கிறார். கேட்கும்போதே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மையாக நடந்திருக்கிறது.
பிப்ரவரி 20, 1990 ஆம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச்சியில் வெலிங்டன் - கேன்டர்பரி அணிகளுக்கு இடையே முதல் தர கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியில் வெலிங்டன் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 290 ரன்கள் முன்னிலை பெற்று டிக்ளோர் செய்தது. கேன்டர்பரி அணி 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதாகும்.
கடைசி நாள் ஆட்டம். 59 ஓவர்களில் 291 ரன்களை கேன்டர்பரி அணி கட்டாயம் எடுக்க வேண்டும். ஆனால் அந்த அணி ஒரு கட்டத்தில் 108 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்திக்க இருந்தது. கேன்டர்பரி அணியின் பேட்ஸ்மேன்கள் லீ ஜெர்மன், ரோஜர் போர்டு ஆகியோர் களத்தில் இருந்தனர்.
ஆட்டம் முடிய இன்னும் 2 ஓவர்கள் மட்டுமே இருக்கிறது. 95 ரன்கள் எடுத்தால் கேன்டர்பரி அணி வெற்றி பெறலாம். இல்லையென்றால் போட்டியில் வெலிங்டன் அணி வெற்றி பெறும். பார்வையாளர்கள் எல்லோரும் வெலிங்டன் அணி எளிதாக வெற்றி பெறும் என நினைத்திருந்தனர்.
அப்போது தான் கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் நம்ப முடியாத ஒரு மிராக்கிள் நடந்தது. வெலிங்டன் கேப்டன் பெர்ட் வான்ஸ் ஓவர் வீசியுள்ளார். அவர் 6 சரியான பந்துகளை வீசுவதற்கு பதிலாக மொத்தம் 22 பந்துகளை வீசினார். அதில் 17 பந்துகள் நோ பால்கள். பேட்டிங் ஸ்டிரைக்கில் இருந்த லீ ஜெர்மன் 70 ரன்களை விளாச, போர்டு 5 ரன்களை விளாசினார்.
பெர்ன் வான்ஸ் வீசிய 22 பந்துகளில் 0, 4, 4, 4, 6, 6, 4, 6, 1, 4, 1, 0, 6, 6, 6, 6, 0, 0, 4, 0, 1 என்ற முறையில் கேன்டர்பரி அணி ரன்களை குவித்தது. லீ ஜெர்மன் அபாரமாக விளையாடி சதமும் அடித்தார். இருப்பினும் இந்தப் போட்டியில் இன்னொரு திருப்பமும் ஏற்பட்டது.
எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட வெலிங்டன் அணி இப்போது தோல்வி அடையும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேன்டர்பரி அணியும் 290 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
முடிவில் இப்போட்டி டையில் முடிவடைந்தது. கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் 77 ரன்கள் விட்டுக் கொடுத்த மிக மோசமான பந்துவீச்சாளராக பெர்ட் வான்ஸ் இருக்கிறார். லீ ஜெர்மன் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.