WrestleMania: மரணங்களை வென்ற மல்யுத்த நாயகன் அண்டர்டேக்கருக்கு சிலை

Sun, 03 Apr 2022-3:42 pm,

WWE மல்யுத்த போட்டியில் கடந்த 20 ஆண்டுகளாக கோலோச்சினார் அண்டர்டேக்கர். ஆண்டுக்கு ஒருமறை நடைபெறும் WrestleMania -ல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தோற்காமல் இருந்தார். 

முதன்முறையாக அவரை பிராக்லெஸ்னர் WrestleMania -ல் வீழ்த்தினார். முதல்முறை அண்டர்டேக்கரிடம் தோல்வியுற்ற அவர், மீண்டும் இரண்டாவது முறையாக மோதும்போது தோற்கடித்தார். 

இந்த தோல்வியை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அரங்கத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் கண்ணீர்மல்க அண்டர்டேக்கரை வழியனுப்பி வைத்தனர். 

அந்தப் போட்டியோடு மல்யுத்த போட்டிக்கு விடை கொடுப்பதாகவும் அண்டர்டேக்கர் அறிவித்தார். ஆனால் அவரை மல்யுத்த உலகம் விடவில்லை. 

அண்டர்டேக்கர் மீண்டும் களத்துக்கு வரவேண்டும் என மிகப்பெரியளவில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதனால், மீண்டும்  WWE WrestleMania-ல் கலந்து கொண்டு போட்டியிட்டார். ரோமன் ரெயின்ஸிடம் கடும்போராட்டத்துக்கு பிறகு தோல்வியடைந்தார். இந்த தோல்வியும் அவரின் வயது மூப்பு காரணமாகவே வந்தது.  

இப்போட்டிக்கு பிறகு முழுமையாக WWE -ல் இருந்து விடைபெற்றார். அவருக்கு கண்ணீர்மல்க ரசிகர்கள் பிரியா விடை கொடுத்தனர். மல்யுத்த உலகை பொறுத்தவரை இவருக்கு 7 உயிர் இருப்பதாக ரசிகர்கள் நம்பினர். 

இந்த ஆண்டு Hall Of Fame விருதுக்கு அழைகப்பட்ட அவருக்கு WWE சார்பில் சிலை செய்யப்பட்டு அண்டர்டேக்கர் கவுரவிக்கப்பட்டார். 

இந்த நிகழ்ச்சியில் அண்டர்டேக்கருடன் ரிங்கில் கடுமையாக, ரத்தம் சொட்ட சொட்ட சண்டையிட்ட வீரர்கள் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link