Xiaomi Redmi Note 12 வாங்கலாமா? என்ன என்ன சிறப்பம்சங்கள்?
ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் 6.67 அமோல்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது, கடந்த ஆண்டில் இந்த சாதனம் 6.43 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
5ஜி ஆதரவை கொண்டிருக்கும் இந்த ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்ட்ரகன் 4 ஜென் 1 ப்ராசஸர் உடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 எம்பி முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோவுடன் சிறந்த கேமரா அனுபவத்தை வழங்குகிறது.
இந்த புதிய வருடத்தில் ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் ஆனது உங்களுக்கு ரூ.17,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.
மேலும் இரண்டு சிம் பயன்பாடு மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ஒரு நாள் முழுவதும் சார்ஜ் நிற்கக்கூடிய வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.