யாராவது இருக்கீங்களா? யாஷிகா தேடும் அந்த நபர் யார்?
பிக்பாஸ் மூலம் பிரபலமானா யாஷிகா, பஞ்சாப் மாடல் அழகியாவார். கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய திரைப்படங்களில் நடித்த அவருக்கு, இருட்டு அறையில் முரட்டு குத்து படம் பரவலான அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் சென்றடைந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மிகப்பெரிய விபத்தில் சிக்கிய யாஷிகா, தீவிர சிகிச்சைக்குப் பிறகு பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார்
இயல்பு நிலைக்கு திரும்பிய அவர், மீண்டும் கலக்கலாக போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக நடத்திய போட்டோஷூட்டில் யாரோ ஒருவரை ஏக்கத்துடன் தேடுவதுபோல் போஸ் கொடுத்திருக்கிறார். அந்த நபர் யார்? என்பது தான் நெட்டிசன்களின் கேள்வியாக இருக்கிறது. மவுனம் கலைப்பாரா?