Year Ender 2021: இந்த ஆண்டு வரலாற்றில் இந்தியாவின் மறக்கமுடியாத 5 தருணங்கள்!
ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமான ஆண்டு 2021. இந்தியாவில் முதன்முறையாக, ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது. தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வின்படி, இப்போது நாட்டில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் உள்ளனர். சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, ஆண்களை விட பெண்களின் மக்கள்தொகை அதிகமாகி இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
குறைந்த கருவுறுதல் விகிதம் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS) தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) மற்று ஒரு பெண்ணுக்கு சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை, தேசிய அளவில் 2.2லிருந்து 2 ஆகக் குறைந்துள்ளது. NFHS 2019-21 இன் தரவுகளின்படி, நாட்டின் நகரங்களில் கருவுறுதல் விகிதம் 1.6 சதவீதமாகவும், கிராமங்களில் 2.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
யூனிகார்ன் நிறுவனங்களில் முன்னேற்றம் யூனிகார்ன் நிறுவனங்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஹுருன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டு நவம்பர் வரை இந்தியாவில் 33 ஸ்டார்ட்அப் யூனிகார்ன்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் நாட்டில் யூனிகார்ன் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் 39 யூனிகார்ன்கள் உள்ளன. யூனிகார்ன்ஸ் என்பது ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது
தடகளப் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கம் தங்க மகன் நீரஜ் சோப்ராவை இன்று அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு அவரை அறிந்தவர்கள் சிலர் மட்டுமே... உண்மையில், டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல், நீரஜ் சோப்ரா இதுவரை இந்தியா பெற்றிறாத தங்கப் பதக்கத்தை வென்று சாதித்தார். இந்த ஆண்டு தடகளப் போட்டியில் இந்தியா முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றது என்பதும் இந்த ஆண்டு இந்தியா அதிகபட்சமாக 7 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது என்பதும் இந்த ஆண்டு இந்தியாவுக்கு பெருமையான தருணமானது.
என்.டி.ஏவில் பெண்கள்
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, பெண்கள் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. என்.டி.ஏ தேர்வில் பெண்கள் பங்கேற்கும் வாய்ப்பு நாட்டிலேயே முதல்முறையாக இது நடந்தது.