Year Ender 2021: ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவழைத்த திரைப்படங்கள்
பல லாக்டவுன்களின் பின்னடைவுகளை சமாளிக்க தொழில்துறை இன்னும் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் தமிழ் திரைப்படம் 'மாஸ்டர்' வந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் 'மாஸ்டர்'. மாஸ்டர் திரைப்படம் வெளியான நேரத்தில், மற்றும் சுமார் ₹230-300 கோடிகளை வசூலித்து உலக பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்த முதல் இந்தியத் திரைப்படம் ஆனது. இது சுணங்கிப் போயிருந்த தமிழ் திரைப்படத்துறைக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. அதன்பிறகு, பல திரைப்படங்கள் வெள்ளித்திரையில் வெளியாகத் தொடங்கின. மாஸ்டர் திரைப்படம், திரையரங்களில் ரசிகர்களை மீண்டும் வரத்தூண்டிதில் மாஸ்டர் என நிரூபித்தது.
வெளியாவதற்கு முன்பே சாதனைகளை முறியடித்த ஸ்பைடர் மேன் திரைப்படம் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு. இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தொடக்கத்தை வழங்கிய ஸ்பைடர் மேன் திரைப்படம் இந்தியாவில் ஹாலிவுட் வெளியீடுகளின் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தொடக்கத்தை பதிவு செய்தது. ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ திரைப்படத்திற்காக, மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, சினிமா கண்காட்சியின் வரலாற்றில் இரண்டாவது முரையாக முன்பதிவு டிக்கெட் விற்பனை அதிகரிப்பைக் கண்டது! இந்த திரைப்படம் இப்போது இந்தியாவில் 2021 இன் மிகப்பெரிய படமாக மாறியுள்ளது, தொடக்க வார இறுதியில் ரூ 138.55 கோடி வசூல் செய்துள்ள ஸ்பைடர் மேன் நோ வே ஹோம், உலகளவில் முதல் வார இறுதியில் $587 மில்லியன் வசூலித்தது. இது, தொற்றுநோய்க்குப் பிந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஜான் வாட்ஸ் இயக்கத்தில், டாம் ஹாலண்ட், ஜெண்டயா, பெனடிக்ட் கம்பெர்பாட்ச், ஜேக்கப் படலோன், ஜான் ஃபேவ்ரூ, மரிசா டோமி, ஜேபி ஸ்மூவ், பெனடிக்ட் வோங், ஜேமி ஃபாக்ஸ், ஆல்ஃபிரட் மோலினா, தாமஸ் டாஃபோ, ஆர்ஷி ஹாடன் சர்ச், வில்லெம் டாஃபோ, ஆர். .
(Photograph:Twitter)
மராத்தி திரைப்படமான 'முல்ஷி பேட்டர்ன்' படத்தின் ரீமேக்கை மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கி சல்மான் கான் பிலிம்ஸ் தயாரித்தது. ஜீ ஸ்டுடியோவால் விநியோகிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், சல்மான் கான் நடிப்பில் ஆயுஷ் ஷர்மா மற்றும் மஹிமா மக்வானா நடித்துள்ளனர். பல சர்ச்சைகளுக்கு மத்தில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம். (Photograph:Twitter)
மார்வெல் மல்டிவர்ஸ் நிறுவனத்தின் 2021 வெளியீடான வெனோமின் (2018) தொடர்ச்சி இந்த படம். சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியாவால் விநியோகிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ஆண்டி செர்கிஸ் இயக்கியுள்ளார். இந்தி, ஆங்கிலம் மற்றும் பல பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த படம், புதிய மற்றும் பழைய ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வந்தது.
அபிஷேக் கபூர் இயக்கிய சண்டிகர் கரே ஆஷிகி திரைப்படம் டி-சீரிஸ் மற்றும் கை இன் தி ஸ்கை பிக்சர்ஸ் இணை தயாரிப்பின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. நடுத்தர பட்ஜெட் படமாக இருந்தாலும் வழக்கத்திற்கு மாறான கதையம்சத்தைக் கொண்ட படங்கள் கூட டிக்கெட்டுகளை விற்று சாதிக்கும் என்று நிரூபித்த இந்திய திரைப்படம் சண்டிகர் கரே ஆஷிகி. ஆயுஷ்மான் குர்ரானா மற்றும் வாணி கபூர் ஆகியோர் திருநங்கையாக ஒரு அசாதாரண பாத்திரத்தில் நடித்துள்ள நகைச்சுவையான திரைப்படம் (Photograph:Twitter)