இந்தாண்டில் ஆதிக்கம் செலுத்திய மொபைல்கள்... அதுவும் ரூ.15 ஆயிரம் குறைவான விலையில்!
நடப்பாண்டில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைக்கு அறிமுகமாகின. குறிப்பாக, Samsung, Realme உள்ளிட்ட நிறுவனங்கள் 5ஜி இல்லாத ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தின.
மக்கள் எப்போதும் செல்போனை வாங்குவதில் ஆர்வமாக இருப்பார்கள் என்றாலும் விலை குறித்து அதிகம் யோசிப்பார்கள், அதிலும் குறைவான விலையில் நிறைவான பலன்கள் உள்ல மொபைல்களை விரும்புவார்கள்.
அந்த வகையில், குறைவான விலையில் நிறைவான பலன்கள் தரும், 5ஜி இல்லாத டாப் 4 ஸ்மார்ட்போன்கள் குறித்து இதில் காணலாம்.
Samsung Galaxy A04s: 64ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1டிபி வரை விரிவாக்கிக் கொள்ளலாம். 64 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உள்ளது. இதில் 50MP பிரதான கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. சாம்சங்கின் இந்த மொபைல் 5MP முன்பக்க கேமராவை செல்ஃபிக்காக கொண்டு வந்துள்ளது. மொபைலில் 5000mAh பேட்டரி உள்ளது. இது 15 W அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. இதில் 2 நாள்கள் வரை சார்ஜ் நிற்கும். இதன் விலை 11 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும்.
Realme C25Y: ரியல்மியின் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் பிரதான சென்சார் 50MP, மோனோக்ரோம் சென்சார் 2MP மற்றும் மேக்ரோ சென்சார் 2MP என மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போன் 8MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. 5,000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் இதில் உள்ளது. இதன் விலை 8 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும்.
Itel S23+: இந்த மொபைலில் 6.7-இன்ச் FHD டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை மற்றும் 3D வளைந்த டிஸ்பிளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் 50MP பின்புற கேமரா, 5,000mAh பேட்டரியைப் பெறுகிறார்கள். இவை அனைத்தும் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களில் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் இதில் நீங்கள் அவற்றை ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாகப் பெறுவீர்கள். இதன் விலை 15 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும்.
Lava Blaze 2 5G: 18W வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் ஸ்டோரேஜை 1டிபி வரை அதிகரிக்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 50MP பின்பக்க கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா, சிறந்த செல்ஃபிக்களுக்கான ஸ்கிரீன் ஃபிளாஷ் உடன் வருகிறது. இதன் விலை 11 ஆயிரத்து 299 ரூபாய் ஆகும்.