சுனாமி வெள்ளம் பேரழிவு என உலகை உலுக்கிய மறக்கமுடியாத இயற்கைப் பேரழிவுகள்!

Tue, 26 Dec 2023-10:23 am,

இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது (2004 earthquake), இந்தியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலில் 65 அடி உயர அலைகள் எழுந்தன. விடுமுறையைக் கொண்டாட கடற்கரைகளுக்கு சென்று மகிழ்ந்த மக்களை சுனாமி சின்னபின்னப்படுத்தியது. இந்த ஆழிப்பேரலைக்கு இந்தியாவில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

ஆகஸ்ட் 1931 இல், சீனாவில் ஒரு பேரழிவு வெள்ளம் ஏற்பட்டது, அதில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்தனர். சீனாவின் வுஹான் மற்றும் நான்ஜிங் போன்ற மக்கள் அதிகமாக வசிக்கும் நகரங்கள் இதில் முழுமையாக மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணி பல மாதங்களாக தொடர்ந்தது. இன்றுவரை பலி எண்ணிக்கையை சரியாக மதிப்பிட முடியவில்லை என்பது காலத்தை கடந்து நிற்கும் ஆழமான காயம் 

1887 ஆம் ஆண்டு சீனாவில் ஒரு பயங்கர வெள்ளம் ஏற்பட்டது, இது மஞ்சள் நதி வெள்ளம் என்று அழைக்கப்படுகிறது. இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சீனாவின் நான்கில் ஒரு பங்கு அதில் மூழ்கியது, இது மீண்டும் கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் ஆனது.

1976ல் சீனாவின் டாங்ஷான் நகரில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 23 வினாடிகள் நீடித்த இந்த பூமி அதிர்வு, பெரும் அழிவை ஏற்படுத்தியது. நகரில் 90 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாகின. 655,000 பேர் இறந்தனர்.  

1970 ஆம் ஆண்டில், அன்றைய கிழப்பு பாகிஸ்தானாக இருந்த இன்றைய வங்காளதேசத்தில் மிகவும் பயங்கரமான புயல் ஏற்பட்டது, இது போலா சூறாவளி என்று அழைக்கப்படுகிறது. இதில் 500,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது மட்டுமல்ல, இந்த சூறாவளி ஏற்படுத்திய மனக்கசப்பு, உள்நாட்டுப் போரைத் தூண்டியது, இறுதியில் இந்தியா தலையிட்டது. பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் உருவாவதற்கு காரணமான சூறாவளி போலா.  

2010 இல், ஹைட்டியில் 7.0 ரிக்டர் அளவிலான பேரழிவுகரமான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது முழு நகரத்தையும் அழித்தது. இதில் 316,000 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆண்டுகள் முகாம்களில் வாழ வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திய நில அதிர்வு இது.  

கி.பி.526ல் துருக்கியின் அன்டாக்யா நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர பூகம்பத்தில் வரலாற்றாசிரியர் ஜான் மலாலா உயிர் தப்பினார். இந்த பேரழிவை அவர் தனது 'குரோனிக்கிள்' இல் விவரித்தார். இதில் 300,000 பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.  

1839 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கொரிங்கா நகரை ஒரு புயல் தாக்கியது. இது 300,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது, இது 1970 போலா சூறாவளிக்குப் பிறகு உலகளவில் இரண்டாவது கொடிய சூறாவளியாக அமைந்தது. துறைமுகத்தில் இருந்த பல கப்பல்கள் அழிக்கப்பட்டு வீடுகள் ஆறுகளிலும், பெருகிய பிரவாகத்திலும் அடித்து செல்லப்பட்டது

1737ல் கல்கத்தாவில் பயங்கர புயல் வீசியது. ஹூக்ளி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வட இந்தியப் பெருங்கடலில் பதிவான முதல் பெரிய புயல் இதுவாகும்.300,000 க்கும் மேற்பட்ட மக்களை பலிவாங்கிய இந்த புயலால் வங்காள விரிகுடாவில் பல கப்பல்கள் மூழ்கின.

1139 இல் கஞ்சா நகரில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது செல்ஜுக் மற்றும் ஜார்ஜியா பேரரசுகளை அழித்தது. இந்த பகுதி இன்று அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா என்று அழைக்கப்படுகிறது. இதில் 300,000 பேர் பலியானார்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link