Year Ender 2021: இந்த ஆண்டின் வித்தியாசமான புகைப்படங்கள்
ஜெர்மனியில் அக்டோபர் 23 அன்று புல்மேன் சிட்டி வெஸ்டர்ன் தீம் பார்க்கில் மீசை மற்றும் தாடி சாம்பியன்ஷிப் 2021 போட்டியில் ஆஸ்திரியாவின் நார்பர்ட் டாப் பங்கேற்றார். அவருடைய மீசை புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தன்னுடைய உருவத்தை வித்தியாசமாக மாற்றிக் கொண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த மனிதன்
இந்த படம் 24 மே 2021 அன்று கிரிமியாவில் எடுக்கப்பட்டது. ஒரு மிருகக்காட்சிசாலையில் இருந்து கிப்பன் வகை மனிதக் குரங்கு ஒன்று சாலையில் நடந்து செல்லும் புகைப்படம் வைரலானது.
ஜனவரி 15 அன்று கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள தி ரோஸ் பவுல் ஸ்டேடியத்திற்கு வெளியே உள்ள ஜுராசிக் குவெஸ்ட் டிரைவ்-த்ரூ எக்ஸ்பீரியன்ஸ் பகுதி இது. இங்கு ராப்டார் போன்ற உடையணிந்த பணியாளருடன் சமந்தா பெய்லி செல்ஃபி எடுக்கிறார்.
ஜூன் 23 அன்று வாடிகன் நகரில் பொதுமக்கள் சந்திப்பின்போது, ஸ்பைடர் மேன் உடையணிந்த ஒரு மனிதரை போப் பிரான்சிஸ் வாழ்த்துகிறார்.
சுவிட்சர்லாந்தின் கிளாசன்பாஸ் அருகே உள்ள ஹை ஸ்விஸ் ஆல்பைன் புல்வெளிகள் வழியாக ஹெலிகாப்டர் மூலம் பசு ஒன்று கொண்டு செல்லப்பட்ட புகைப்படம் பரவலான வரவேற்பைப் பெற்றது
கொரோனா லாக்டவுனின்போது, ஃபியாமெட்டா என்ற 10 வயது சிறுமி, ஆடு மேய்க்கும் தனது தந்தையுடன் மலைகளுக்கு சென்றார். வடக்கு இத்தாலியின் கால்டெஸில் உள்ள மலைகளில் ஆட்டு மந்தையின் மத்தியில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளும் புகைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.