வருடம் 2017: பாலிவுட்டை ஆட்சி செய்த திரைப்படங்கள்!!

Wed, 27 Dec 2017-3:17 pm,

சல்மான்கான் நடிப்பில் இந்த வருடத்தின் கடைசியில் வெளியான படம் டைகர் ஜிந்தா ஹே (Tiger Zinda Hai). அலி அப்பாஸ் ஜாபர் இயக்கி உள்ளார்.  முதல் மூன்று நாளில் 100 கோடி ரூபாய் மைல்கல்லை கடந்தது. சல்மான் கானுக்கு கோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இப்படம் குறைந்தது 300 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.

பாகுபலி 2 (Baahubali: The Conclusion):  2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய வரலாற்றுத் திரைப்படம் ஆகும். உலகம் முழுவதும் சுமார் ரூ. 1500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், ரானா தக்குபாடி, சத்தியராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.  இராஜமௌலி இயக்கி உள்ளார். 

இயக்குனர் டேவிட் தவான் இயக்கிய ஜூடுவா 2 (Judwaa 2) படத்தில் நடிகர் வருண் தவான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தப்சீ பன்னு மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ளனர். இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 227.59 கோடி வசூலித்துள்ளது. 

அக்ஷய் குமார் மற்றும் புமி பேட்னெக்கர் நடிப்பில், ஸ்ரீ நாராயண் சிங் இயக்கத்தில் உருவான திரைப்படம் டோயலேட்: ஏக் பிரேம் கதா (Toilet: Ek Prem Katha). இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 216.58 கோடி வசூலித்துள்ளது.

ரோஹித் ஷெட்டி இயக்கிய இயக்கத்தில் அஜய் தேவ்கன், பரிநித்தி சோப்ரா, அர்ஷத் வார்ஸி, குணால், தபு, ஷ்ரியாஸ் தல்பேடு, துஷார் கபூர் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான நகைச்சுவை திரைப்படம் கோல்மால் ஃஎகைன் (Golmaal Again). இது உலகம் முழுவதும் 309.21 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

ஷாசானக் கைடன் இயக்கத்தில் உருவான நகைச்சுவை படம் பத்ரிநாத் கி துல்ஹனியா (Badrinath Ki Dulhania). இந்த படத்தில் நடிகர் வருண் தவான் - நடிகை அலி பட் நடித்தனர். இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 200.34 கோடி வசூலித்துள்ளது.

ஜோலி எல்எல்.பி (Jolly LLB) படத்தின் இரண்டாம் பாகம் ஆனா ஜோலி எல்.எல்.பி 2 ( Jolly LLB 2 )படம், உலகம் முழுவதும் ரூ. 197.33 கோடி வசூலித்துள்ளது. இந்த படத்தை சுபாஷ் கபூர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஹீரோவாக அக்ஷய் குமார் நடித்துள்ளார்.

ஷாருக் கான் - மஹிரா கான் நடிப்பில், ராகுல் தோலாக்கியா இயக்கத்தில் வெளிவந்த ரயீஸ்(Raees) திரைப்படம், உலகம் முழுவதும் ரூ 308.27 கோடி வசூலித்துள்ளது.

கபீர் கான் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான டூயூப் லைட் (Tubelight) திரைப்படம், உலகம் முழுவதும் ரூ. 211.14 கோடி சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் யமி கவுதம் நடித்த காபில்(Kaabil) திரைப்படம், உலகம் முழுவதும் ரூ .209.5 கோடி வசூல் செய்தது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link