இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்க உதவும் சில யோகாசனங்கள்!

Sun, 18 Feb 2024-4:34 pm,

இதய ஆரோக்கியத்திற்கு, உணவு முறை முக்கிய பங்கு வகித்தாலும், அதன் கூடவே யோகாசனங்களையும் செய்வது, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கிறது. அந்த வகையில் இதய தமனிகளில் சேரும் கொலஸ்ட்ராலை எரிக்க உதவும் யோகாசனங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

எளிமையான அடிப்படை ஆசனமான தாடாசனம், இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த ஆசனம் ஆகும். இந்த ஆசனத்தை செய்யும்போது, நேராக நின்று கொண்டு, மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே கைகளை மேலே தூக்க வேண்டும். கைகளை தூக்கும் போது குதிகாலை மேலே முடிந்த அளவு உயர்த்த வேண்டும். பின்னர் மூச்சை வெளியே விட்டபடி பழைய நிலைக்கு திரும்ப வரவேண்டும்.

திரிகோணாசனம், இதய தவனிகளில் சேரும் கொழுப்பை எரிக்க உதவுவதோடு, நானே நரம்புகள் அனைத்தையும் முடுக்கி விட்டு, நமக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதனால் நாம் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வோம்.

அர்த்த மத்ஸ்யேந்திராசனம், இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதோடு, கொழுப்பை நீக்கி உடலை டீடாஸ் செய்ய உதவுகிறது. உட்கார்ந்த நிலையில் பாதத்தையும் முழங்காலையும் மடக்கி குறுக்காக வைத்து செய்யப்படும் இந்த ஆசனம், மாரடைப்பு அபாயத்தை பெரிதளவு குறைக்கிறது.

புஜங்காசனம், இதய தமனிகளில் சேரும் கொலஸ்ட்ராலை எரிக்க உதவுவதோடு நுரையீரலையும் வருபடுத்துகிறது. நமது மார்பும் தோள்பட்டையும் விரிவடைவதால், சுவாசம் மூலம் அதிக ஆக்சிஜன் உடலுக்கு கிடைக்கும். ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

உடலை வில்போல் வளைத்து செய்யும் தனுராசனம், மார்பகத்தை விரிவடையச் செய்து, உடலுக்கு ஆற்றலை அள்ளி கொடுத்து, கொழுப்பை இருக்கிறது. குப்புற படுத்துக்கொண்டு கால்களையும் கைகளையும் சேர்த்து உடலை வில்லாக வளைத்து செய்யும் இந்த ஆசனத்தை நிச்சயம் முயற்சி செய்யவும்.

உஸ்ட்ராசனம் ஒட்டக ஆசன நிலையை பிரதிபலிக்கிறது. இது உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, இதய தமனிகளில் சேரும் கொழுப்பை இருக்கிறது. உடலின் நடுப்பகுதியை பின்னோக்கி வளைத்து செய்யப்படும் இந்த ஆசனம், இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிப்பதோடு மட்டுமல்லாமல், முதுகு தண்டையும் வலுப்படுத்துகிறது.

சவாசனம் என்பது, உணர்ச்சி ஏதும் இல்லாமல் வெறுமனே படுத்துக் நிலையில் செய்யப்படும் ஆசனம். இது கண்களை மூடிக்கொண்டு, நமது மூச்சில் கவனம் செலுத்தி உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவும் ஆசனம். உடலில் உள்ள தசைகளை தளர்த்தி மனதிற்கு அமைதியை அளிக்கும் இந்த ஆசனம் இதை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

யோகா பயிற்சிகள் நிச்சயம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை மாற்று கருத்து ஏதும் இருக்க முடியாது. இருப்பினும் அதனை சரியான முறையில் செய்தால் தான் நல்ல பலன் கிடைக்கும். எனவே சிறந்த யோகா பயிற்சியாளரிடம், சில நாட்களுக்கு பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு செய்வது நல்ல பலனை கொடுக்கும். அதோடு உணவு பழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link