Make Money Online: வெறும் 2 மணிநேரம் போதும் ஆன்லைனில் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.
இப்போதெல்லாம் வேலையுடன் சேர்த்து கூடுதல் வருமானமும் இருப்பது மிக முக்கியமானதாகி விட்டது. ஒவ்வொரு நபரும் தனது தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் வருமான எப்படி ஈட்டுவது என திட்டமிட்டு வருகிறார்கள். பல வழிகள் இருந்தாலும், தற்போது நீங்கள் வீட்டில் இருந்தபடியே பெரிய முதலீடு எதுவும் இல்லாமல் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
ஆன்லைனில் சம்பாதிக்கும் பிரபலமான வழிகள் இணையம் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பல வழிகளை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் கூடுதல் வருமானத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை பெறலாம். ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் என்னென்ன? என்பதை அடுத்தடுத்து பார்ப்போம்.
யூடியூப் (YouTube) இல் சேனலை உருவாக்குவதன் மூலம், வீடியோவை நீங்கள் பதிவேற்றலாம். தினசரி வ்லோக் (Vlog), ஒரு குறிப்பிட்ட தலைப்பில் டுடோரியல் (விளக்கம்) அல்லது பொழுதுபோக்கு வீடியோ என ஏதுவாக இருந்தாலும், உங்கள் படைப்பாற்றலுக்கு ஏற்ப வீடியோவை உருவாக்கலாம். நீங்கள் தொடர்ந்து வீடியோ பதிவை போடுவதன் மூலம் உங்கள் சேனலில் அதிக சந்தாதாரர்களைப் பெறலாம். அதன்பிறகு விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம்.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பிளாக்கிங் (Blogging) ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் கூகுள் (Google) தளத்தில் வலைப்பதிவு எழுதுவதன் வருமானத்தை ஈட்டலாம். இதற்காக கூகுள் நிறுவனம் பிளாக்கர் என்ற வசதியை நமக்கு வழங்கி உள்ளது. எந்த பிளாட்பாரத்தில் எழுதப் போகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் வலைப்பதிவில் பிரபலமான மற்றும் டிரெண்டிங் தலைப்புகளில் கட்டுரைகளை எழுதலாம். உங்கள் இணையதளத்தை வாசிக்க அதிகமானோர் வரும் போது, கூகுள் ஆட்சென்ஸ் மற்றும் அஃபிலியேட் மார்க்கெட்டிங் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம். வலைப்பதிவுக்கு தொழில்நுட்ப அறிவைவிட ஆர்வமும் பொறுமையும் தேவை.
தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்புவோருக்கு ஃப்ரீலான்சிங் (Freelancing) ஒரு சிறந்த வழி. இதன் கீழ் கன்டென்ட் ரைட்டிங், வெப் டிசைனிங், புரோகிராமிங், எடிட்டிங் போன்ற வேலைகளை செய்யலாம். Upwork, Fiverr and Freelancer போன்ற பல ஆன்லைன் தளங்களில் உங்கள் வசதிக்கேற்ப வேலையி தேர்வு செய்து பணம் சம்பாதிக்கலாம்.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்தி நீங்கள் பணம் சம்பாதிக்கக்கூடிய சமூக ஊடக மார்க்கெட்டிங் (Social Media Marketing) வளர்ந்து வரும் துறையாகும். உங்கள் சமூக ஊடக கணக்குகளில் உங்களுக்கு நல்ல எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்கள் இருந்தால், உங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் புதிய தயாரிப்புகள், மார்க்கெட்டிங்க், சேவைகளை விளம்பரப்படுத்துவது மற்றும் நிறுவனங்களின் ஸ்பான்சர் செய்யப்பட்ட இடுகைகள் மூலம் சம்பாதிக்கலாம். இதன் மூலம் நீங்கள் செல்வாக்கு செலுத்துபவராக மாறலாம் மற்றும் பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளையும் விளம்பரப்படுத்தவும் முடியும்.
உங்கள் நேரம் மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய பல ஆன்லைன் வருவாய் விருப்பங்கள் உள்ளன. உங்கள் அறிவுக்கு ஏற்ப ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online Tutoring) எடுத்தும் சம்பாதிக்கலாம். இ-புத்தகங்கள், டிஜிட்டல் ஆர்ட், அச்சுப் பொருட்கள் போன்ற டிஜிட்டல் பொருட்களை (Digital Products) விற்பனை செய்வதன் மூலமும் சம்பாதிக்கலாம்.