உடல் பருமனை குறைக்கணுமா... இந்த சிம்பிள் விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க போதும்
உடல் பருமன்: நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் தந்த பரிசு, தொப்பை கொழுப்பு மற்றும் உடல் பருமன். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை கடுமையான நோய்களுக்கு உடல் பருமன் காரணமாகி வருகிறது. அதைக் குறைக்க உங்கள் உடலில் மாற்றத்தை காணலாம்.
காலை உணவு: உங்களின் காலை உணவில் புரதச்சத்து மற்றும் நார்சத்து அதிகம் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளவும். இதற்கு முட்டை, பருப்பு வகைகள் கட்டாயம் உணவில் இருக்கட்டும். அதோடு முக்கியமாக ரெடி டு ஈட் வகை தானியங்கள் மற்றும் பிற உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் சமைத்த உணவு: பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள் உடல் எடை அதிகரிப்பதற்கு மிகப்பெரிய காரணமாகி வருகிறது. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்பினால், வீட்டில் சமைத்த உணவையே எப்போதும் சாப்பிட வேண்டும். இதற்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, எளிய முறையில் வீட்டில் செய்த உணவையே உண்ண வேண்டும்.
பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்: பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது பல வழிகளில் நமக்கு நன்மை பயக்கும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் உங்கள் எடையைக் குறைக்க உதவும். உங்கள் காலை மற்றும் மாலை சிற்றுண்டியில் பழங்களை சேர்த்து வந்தால், அது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். இதற்கு நீங்கள் எப்போதும் பருவகால பழங்களை உட்கொள்ள வேண்டும்.
இரவு உணவு: நீங்கள் சாப்பிடும் இரவு உணவு எளிதில் ஜீரணிக்க கூடியதாக இருக்க வேண்டும். அதோடு, நீங்கள் உங்கள் இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. இதனால், செரிமான பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம். உடல் பருமன் குறைய செரிமானம் சிறப்பாக இருக்க வேண்டும்.
போதுமான தூக்கம்: இன்று, மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் வேலை அழுத்தம் காரணமாக, தூக்கம் என்பது பலருக்கு அரிதான விஷயமாகிவிட்டது. இதன் விளைவாக உடலில் ஹார்மோன்கள் சமநிலை பாதிக்க்கப்பட்டு உடல் எடை அதிகரிக்கிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்க வேண்டும்.
தினசரி நடைபயிற்சி: நாம் நாள் முழுவதும் சாப்பிடுவதில் செலவிடும் அதே நேரத்தை தினசரி நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சியில் செலவிட வேண்டும் என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக, தினமும் 40 நிமிடம் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமாக இருக்க அவசியம் என்று கருதப்படுகிறது. எனவே, உடல் எடை இழப்புக்கு, காலை அல்லது மாலை குறைந்தது 40 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது உங்களால் முடிந்த பயிற்சிகளை செய்ய வேண்டும்.
கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை: உடல் எடையைக் குறைக்க, உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதை போலவே, சில விஷயங்களைக் கைவிடுவது முக்கியம். நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் இருந்து சர்க்கரை, மைதா மற்றும் உப்பு ஆகிய மூன்று வெள்ளை நிற பொருட்களை முழுமையாக நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடையை மிக எளிதாகக் குறைக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.