அண்டார்டிகாவின் இந்த கிராமத்தில் கர்ப்பம் தரிக்க தடை; ஏன் தெரியுமா

Mon, 03 May 2021-11:14 pm,

விந்தையான நிபந்தனை கொண்ட அந்த கிராமத்தின் பெயர்  'வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ்' (Villa las estrellas ). இந்த கிராமம் அண்டார்டிகா கண்டத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் பெரிய அளவில் வசதிகள் இல்லை என்றாலும், கடைகள், வங்கிகள், பள்ளிகள், சிறிய தபால் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன

குழந்தைகள் பள்ளிகளில் அடிப்படைக் கல்வியைப் பெறுகிறார்கள். ஆனால் மருத்துவமனைகளில்  அடிப்படை சிகிச்சை மட்டுமே கிடைக்கும். நவீன, மேம்பட்ட சிகிச்சை கிடைக்க வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் கிராமத்திலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். 

வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் என்பது அண்டார்டிகாவில் உள்ள விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக வசிக்கும் பகுதி. சிலி விமானப்படை மற்றும் இராணுவ துருப்புக்களும் இங்குள்ளன. விஞ்ஞானிகள் மற்றும் வீரர்கள்  தனது குடும்பத்தினரையும் இங்கு அழைத்து வந்துள்ளார். இங்கு  வாழும் மக்கள் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதிலும்  எந்த அவசரநிலையும் ஏற்படக் கூடாது என்பதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

குடும்பத்துடன் இங்கு தங்குபவர்கள்  குறிப்பாக இராணுவத்தில் உள்ளவர்களின்  மனைவி கர்ப்பமாக ஆக கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.  ஏனெனில் மருத்துவ வசதி இல்லாததால் எந்தவொரு பெரிய பிரச்சினையும் ஏற்படுவதை தவிர்க்கவே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

 

அப்பகுதியில் உள்ள மக்கள் அப்பெண்டிக்ஸ் பிரச்சனை, குடல் வால் அழற்சி என்னும்  அப்பெண்டிக்ஸ் (appendix ) வலி ஏற்பட்டால், அவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடக்காமல் அவதிப்படுவர்கள் என்பதால், குடல் வால் தேவையில்லாத பகுதி என அறிவிக்கப்பட்டு, அதை நீக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவில் உள்ள இந்த கிராமம் அடர்த்தியான மக்கள்தொகை கொண்டது.  ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ள இந்த பகுதிக்கு செல்ல ராஃப்டிங் படகுகளைப் பயன்படுத்த வேண்டும். வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் பகுதியில் பொது போக்குவரத்து வசதிகள் இல்லை. இங்குள்ள வெப்பநிலை உறைநிலைக்கு கீழே என்ற அளவில் இருந்தாலும், அண்டார்டிகாவில் இது மிகவும் சூடான பகுதியாக கருதப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link