பிரிட்ஜ் பயன்படுத்தும் போது இந்த விஷயத்தில் ஜாக்கிரதை..எப்படி வைத்திருக்கனும் தெரியுமா!
![பிரிட்ஜ் பிரிட்ஜ்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2025/01/28/471809-fridge-8.jpg?im=FitAndFill=(500,286))
வாரந்தோறும் ஒருமுறையாவது பிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டும். அதிகமாகப் பொருட்கள் குவித்து வைப்பதைத் தவிர்க்கவும். பிரிட்ஜில் வைக்கவேண்டிய பொருட்கள் மட்டுமே வைக்கவும்.
![பிரிட்ஜ் பிரிட்ஜ்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2025/01/28/471808-fridge-7.jpg?im=FitAndFill=(500,286))
காய்கறி, பழங்கள் போன்றவை அழுகக்கூடிய நிலையிலிருந்தால் அதனை எடுத்துப் பயன்படுத்தி விடுங்கள், மாறாக அழுகியிருந்தால் அப்புறப்படுத்துங்கள். நீண்ட நாள் அழுகிய பொருட்களை வைக்காதீர்கள்.
![பிரிட்ஜ் பிரிட்ஜ்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2025/01/28/471807-fridge-6.jpg?im=FitAndFill=(500,286))
பிரிட்ஜில் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள மின் சாதனங்களில் ஷார்ட் சர்க்யூட் இல்லை என்பதை வாங்கும் முன் உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லாவிட்டால் தீ விபத்து ஏற்படும் அபாயம் நிகழும்.
பிரிட்ஜில் இருக்கும் அனைத்து ஒயர்களையும் உன்னிப்பாக சரிபார்க்கவும். மேலும் ஏதேனும் சேதம் இருந்தால் உடனடியாக மாற்ற வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் மிக முக்கியமான பகுதிதான் அமுக்கி பொத்தான். இது குளிர்சாதனத்தைக் குளிர்விக்கச் செய்கிறது. மேலும் இதில் வாயு கசிவு, வெடிப்பு அபாயம் போன்றவை நிகழலாம். நீங்கள் அடிக்கடி அமுக்கியை சரிபார்ப்பது நல்லது.
வீட்டில் குளிர்சாதனப்பெட்டியைச் சுவரை ஒட்டி வைக்கக்கூடாது. குளிர்சாதனப்பெட்டிக்கும் சுவருக்கும் சிறிது இடைவெளி இருக்க வேண்டும். மேலும் காற்று செல்லும் வசதியான இடத்தில் பிர்ட்ஜியை வைப்பது நல்லது.
உயர் மின்னழுத்தம் வெளிப்பட்டால் சேதம் ஏற்படலாம். மேலும் சில சமயங்களில் வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மின்னழுத்தம் மாறும்போது நிலைப்படுத்திய பயன்படுத்துவது நல்லது.
மேலேக் கொடுக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் தகவல் அடிப்படையில் எழுதப்பட்டது. பொதுமக்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பிரிட்ஜை பாதுகாத்துக்கொள்ளவும் மற்றும் பராமரிக்கவும் உரிய நடவடிக்கைகள் நீங்கள் மேற்கொண்டால் நீண்ட நாள் பொருள் உழைக்கும் மற்றும் ஆபத்தும் ஏற்படாது.