இளைஞர்கள் இந்த 6 பரிசோதனைகளை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்!
சி-ரியாக்டிவ் புரத பரி சோதனை
இந்த சோதனை மூலம் உங்கள் உடலில் கல்லீரலில் உள்ள பிரச்சனைகளை கண்டறியலாம். உங்கள் உடலில் அதிக அளவு சி-ரியாக்டிவ் புரதம் இருந்தால் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தைராய்டு பரி சோதனை
இந்த பரி சோதனை மூலமா உங்கள் உடலில் தைராய்டு எவ்வாறு சில ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இது உங்கள் இதய துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
லிபிட் பரிசோதனை
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சரி பார்க்க இந்த பரிசோதனை உதவுகிறது. இந்த சோதனை மேற்கொள்ளும் முன்பு குறைந்தது எட்டு மணிநேரம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
சிபிசி பரிசோதனை சிபிசி சோதனை மூலம் உங்கள் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள் போன்றவற்றை கணக்கிடலாம். இதன் மூலம் இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை கண்டறிய முடியும்.
இரத்த பரிசோதனை
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதன் மூலம் உங்கள் உடல் பல்வேறு உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பாலியல் ரீதியான பரி சோதனை
இந்த பரிசோதனை மூலம் உங்களுக்கு ஏதேனும் பாலுறவு நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் ஆபத்துகள் இருந்தால் ஆரம்பத்திலேயே சரி செய்ய உதவும்.