புதிய Bajaj Pulsar NS 125 பைக் எப்படி? இதோ விரிவான விபரங்கள் !

Thu, 22 Apr 2021-4:42 pm,

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் என்எஸ்125 பல்சர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை ரூ. 93,690, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடல் என்எஸ் சீரிசில் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஆகும்.  பஜாஜ் (Bajaj) என்எஸ்125 மாடல் தோற்றத்தில் என்எஸ்160 மற்றும் என்எஸ்200 மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. இதில் 12 லிட்டர் பியூவல் டேன்க், ட்வின் எல்இடி டெயில் லேம்ப்கள், ஸ்போர்ட் அம்சங்களுக்கு ஏற்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 

புதிய என்எஸ்125 மாடலில் 125சிசி, ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 12 பிஹெச்பி பவர், 11 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 144 கிலோ எடை கொண்டுள்ளது.

பஜாஜ் என்எஸ்125 மாடல் - பீச் புளூ, பியெரி ஆரஞ்சு, பர்ன்ட் ரெட் மற்றும் பியூட்டர் கிரே என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. புதிய என்எஸ்125 பைக் அனைத்து நிறத்தேர்விலும் அதிக பளபளப்பான மெட்டாலிக் பெயிண்ட்டால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

அலாய் சக்கரங்கள் வெண்கல நிறத்தில் உள்ளன. பல்சர் என்எஸ்125 பைக்கில் விரைப்பிற்காகவும், சிறந்த ஹேண்ட்லிங்கிற்காகவும், இறுக்கமான ஃப்ரேம் வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய பல்சர் என்எஸ்125 பைக்கில் ஓநாயின் கண் வடிவிலான ஹெட்லேம்ப் அமைப்பு, இரட்டை ஸ்ட்ரிப் எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் பின் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கு பிளவுப்பட்ட வடிவில் பைக்கின் இறுதிமுனையில் பிடிப்பான் முதலியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link