Yusuf Pathan: IPL முதல் தென்னாப்பிரிக்கா வரை Top 5 knocks

Sat, 27 Feb 2021-10:09 pm,

அணிக்கு துரித ரன்கள் தேவைப்படும்போது தோள் கொடுக்கும் வீரர் பதான். நியூசிலாந்தின் இந்திய சுற்றுப் பயணத்தின்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நான்காவது போட்டியில், இந்தியா வெற்றிபெற இந்தியாவுக்கு 316 ரன்கள் தேவைப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களான கெளதம் கம்பீர் மற்றும் பார்த்திவ் படேல் இணைந்து 67 ரன்கள் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் இந்தியாவின் இன்னிங்ஸ் 188/5 என்ற நிலையில் இருந்தபோது களம் இறங்கிய பதான் ரன் மழை பொழிந்தார். ஏழு பவுண்டரிகள் மற்றும் பல சிக்சர்களை அடித்தார். 96 பந்துகளில் 123 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்த பதானின் அந்த ஆட்டம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மைல்கல்

 

பதான் ஒரு ஐபிஎல் சூப்பர் ஸ்டார். 12 சீசன்களில் மூன்று உரிமையாளர்களுக்காக விளையாடினார். இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய முதல் மூன்று சீசன்களில் அவரது சிறப்பான திறமை வெளிப்பட்டது. அவை 'பதான் நாட்கள்' என்று அழைக்கப்பட்டன.

மூன்றாவது சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 213 ரன்களை இலக்கு வைத்து களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் பெரும் சவாலை எதிர்கொண்டது. ராயல்ஸ் 66/4 என்ற நிலையில் இருந்தது, மீதமுள்ள 10 ஓவர்களில் 149 ரன்கள் தேவைப்பட்டது. ராயல்ஸின் வெற்றி அஸ்தமனமாகிவிட்டது என்று நினைத்த சமயத்தில், 9 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களை வீழ்த்திய பதான் அணிக்கு நம்பிக்கைக் கீற்றைக் கொடுத்தார். ஒரு இந்தியருக்கு 37 பந்துகளில் மிக வேகமாக ஐபிஎல் டன் அடித்தார். இருப்பினும், ராயல்ஸ் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.  

2010/11 காலம் பதானின் நாட்கள் என்றே சொல்லலாம்.  251 ரன்களை துரத்திய இந்தியா 60/5 என்ற நிலையில் சிக்கலில் சிக்கியது. இந்தியா 100 ரன்களில் சுருண்டுவிடும் என்ற நிலையில் இருந்தபோது, களம் இறங்கிய பதானின் கைவண்ணம், 70 பந்துகளில் ஆனால் 105  ரன்களை குவித்தது. ஆயினும், தென்னாப்பிரிக்கா 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

 யூசுப் பதான் ராஜஸ்தான் ராயல்ஸில் இருந்து கே.கே.ஆருக்கு மாறியிருந்தார். முதல் இரண்டு இடங்களில் இடம்பெற கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு ஒரு வெற்றி தேவைப்பட்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 161 ரன்கள் இலக்கில் களம் இறங்கியது. 22 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த பதானின் அதிரடியால் அணிக்கு வெற்றி தேடித்தந்தார். 

பதான் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் கில்லாடியாக அடையாளம் காணப்பட்டார். ஆனால் துலீப் டிராபியில் மேற்கு மண்டலத்திற்காக விளையாடியபோது, 331 நிமிடங்கள் ஆடி வெறும் 190 பந்துகளில் 210 ரன்கள் எடுத்தார், துலீப் டிராபியை வென்றார், முதல் தர கிரிக்கெட்டில் மிகப்பெரிய சேசிங் சரிதத்திலும் தனது பெயரை பதித்தார் பதான்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link