உலக புகழ்பெற்ற தாஜ் மஹால் நினைவுச்சின்னத்தின் நுழைவாயிலின் தூண் இன்று காலை இடிந்து விழுந்தது. கடும் மழை மற்றும் சூறைகாற்று காரணமாக தாஜ்மஹால் வளாக தூண் இடிந்து விழுந்ததுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அறிக்கையின் படி, உடைந்த தூண் நினைவுச்சின்னத்தின் தெற்கு நுழைவாயிலில் அமைந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.


உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இங்கு ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. நேற்று இரவு தாஜ் மஹால் வளாகத்தின் தெற்கு நுழைவு வாயலில் உளள தூண் திடீரென இடிந்து அதில் இருந்த கலசங்கள் கீழே விழுந்து சேதமடைந்தன. 


மதுரா மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக வீடு இடிந்துள்ளது. இந்த விபத்ததில் மூன்று பேர் பலியாயினர். மேலும் நந்தகோவன், விருந்தாவன், கோசி காலன் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்கள் சோதமடைந்தன. தொடர்ந்து வலுவான காற்று மற்றும் மழை பெய்து வருவதால் பல பகுதிகளில் மின் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.