மகாராஷ்டிராவில் மராத்திய புத்தாண்டான ’குத்ஹி பத்வா’ மார்ச் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மகாராஷ்டிரா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் பிளாஸ்டிக் பைகள், தெர்மாக்கோல் மற்றும் பிளாஸ்டிக் தகடுகள், பிளாஸ்டிக் கரண்டிகள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு உள்ளது.


முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, ஃபிளக்ஸ் போர்டுகள், பாலிப்ரோப்பிலீன் பைகள், பதாகைகள், கொடிகள், அலங்கார கதவுகள், பிளாஸ்டிக் தாள்கள் மற்றும் அனைத்து வகையான பிளாஸ்டிக் ரேப்பர்கள் போன்ற பல்வேறு பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 மைக்ரான் மற்றும் 8x12 அங்குலங்களைக் காட்டிலும் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பைகளும் தடை செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி முதல் முழுமையாக பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ராம்தாஸ் கதாம் மகாராஷ்டிரா அமைச்சரவையில் தெரிவித்தார்.