ஏர்செல் சேவை முடக்கத்தால், ஏர்செல் வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவன சேவைக்கு மாற பொது அலை மோதி வருவகின்றனர. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள இதர சேவை நிறுவனங்கள் இடையே போட்டி நிலவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போட்டியின் உச்சமாக வாடிக்கையாளர்களுக்கு பக்கெட், காப்பி மக் போன்று இலவச பொருட்களை வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஏர்செல் நிறுவனம் இந்த மாதம் மார்ச் 15-ம் தேதியுடன் முழுவதுமாக தனது சேவையை நிறுத்த அறிவித்து உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதற்குள் தங்களுக்கு விரும்பிய சேவையை தேர்வு செய்துகொள்ளும்படியும் தெரிவித்திருந்தது.


இந்நிலையில், வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்ற பல்வேறு இடத்திற்கும் அலைந்து வந்தனர். இதனிடையே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள இதர சேவை நிறுவனங்கள் இலவசப் பொருட்களை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


நாடுமுழுவதிலும் சுமார் 35 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு பிரமாண்டமாக வளர்ந்து வந்த ஏர்செல் நிறுவனத்தின் பெரும்பான்மை வாடிக்கையாளர்கள் தமிழகத்திலேயே இடம்பெற்றுள்ளனர். ஏர்செல் சேவை முடக்கத்திற்கு பின்னர் இந்த Port வசதியை பயன்படுத்தி சுமார் 15 லட்சம் பேர் Airtel நிறுவனத்திற்கும், 10 லட்சம் பேர் Vodafone நிறுவனத்திற்கும் 5 லட்சம் பேர் BSNL நிறுவனத்திற்கு தாவியாதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த இலக்கினை எட்ட இதர நெட்வோர்குகள் கடுமையாக உழைத்துள்ளது என்றால் மிகை இல்லை, காரணம் Airtel, Vodafone  நிறுவனங்கள் சிறப்பு சேவை மையங்களை(24*7) திறந்து வாடிக்கையாளர்களை பிடித்தது. மேலும் டோர் டெலிவரி செய்வது போல் வீட்டிற்கே சென்று Port செய்து கொடுத்த நிகழ்வுகளும் நடந்தது. இதனால் கனிசமான வாடிக்கையாளர்களை இந்நிறுவனங்கள் பிடித்து என்பது குறிப்பிடத்தகத்து!