அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று சுவீடன் பயணம்
பிரதமர் மோடி 5 நாள் பயணமாக இன்று சுவீடன் புறப்பட உள்ளார். ஸ்வீடன் தலைநகர் ஸ்டால்ஹோமில் 17ம் தேதி முதல் முறையாக நடைபெறும் ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.

இந்த மாநாட்டில் வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர்.
அதனைத் தொடர்ந்து லண்டனில் 3 நாட்கள் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் பிரதமர் மோடி மேலும் லண்டன் டவுன் ஹாலில் பிரிட்டன் வாழ் இந்தியர்களிடையே சிறப்புரையாற்றுகிறார்.. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று முதல் ஏப்ரல் 20 வரை வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார்.