AIIMS-ல் 5 மாதமாக போலி டாக்டராக வலம் வந்த இளைஞர் கைது
தலைநகர் டெல்லியில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 5 மாதங்களாகப் போலி டாக்டராகப் பணியாற்றிய 19 வயது இளைஞரை (அட்னன் குர்ராம்) போலீஸார் கைதுசெய்தனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி டாக்டர் (அட்னன் குர்ராம்) கைது செய்யப்பட்டது மருத்துவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலி அடையாள அட்டையுடனும் கழுத்தில் எப்போதும் ஸ்டெதஸ்கோப் அணிந்த நிலையில் மருத்துவம் படிக்கும் சக மாணவர்களுடன் வாட்ஸ் அப் வழியாக நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெறும் மருத்துவர்களுக்கான கருத்தரங்கங்களில் இந்த இளைஞன் பங்கேற்றுள்ளார். 5 மாதங்களாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் சுற்றி வந்தும் யாரும் கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களுக்கான மாரத்தன் போட்டி நடைபெற்றதில் குர்ராமிடம் பங்கேற்றான். அதில் திருப்தியடையாத மருத்துவர்கள், அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவான் எனவும், இந்த இளைஞன் 10ம் வகுப்பு வரை படித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் ரத்தப் புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டிருந்த தன் சகோதரிக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதற்காக போல டாக்டராகப் பணியாற்றியதாக அட்னன் குர்ராம் கூறியுள்ளான்.