ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியாதால், போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் வாக்குவாதம் கலவரமாக மாறியதால், கலவரத்தை கட்டுப்படுத்த எந்தவித முன் அறிவிப்பும் இன்றி போலீசார் தூப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தூப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கு மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன. இச்சம்பவத்தை குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், இதுகுறித்து முன்னால் மத்திய அமைச்சர் தனது -பா. சிதம்பரம் தந்து ட்விட்டர் பக்கத்தில், காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக எனக் கூறியுள்ளார். 


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை குறித்து அவர் கூறியதாவது, 


தூத்துக்குடி பெருந்துயரத்திற்கு யார் காரணம்? 


1. சிந்தனையும் செயலும் இழந்த மாநில அரசு. 


2. சீரிய தலைமையும் போதிய பயிற்சியும் இல்லாத காவல் துறை. காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ் நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா?


3.  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்த வர்களுக்கு என்னுடைய ஆறுதல் மற்றும் பூரண குணமடைய வாழ்த்து.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.