புதுச்சேரி: கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராரில் சம்பவயிடம் போர்களமாக மாறியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரியின் காலாப்பட்டில் உள்ள ரசாயண தொழிற்சாலை விரிவாக்கப் பணி தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம், இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விரிவாக்கத்திற்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக ஒரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.


இக்கருத்துகேட்பு கூட்டத்தில் இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 
இதையடுத்து மோதலை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தினை கலைக்க முயற்சித்தனர். மேலும் மோதல் வலுக்க காவல்துறையினர் தடியடி நடத்தி நிலைமையினை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர்.


இதனால் புதுச்சேரியின் காலாபட்டில் பதற்றமான நிலைமை நிலவி வருகிறது.