இரண்டு நாள் பயணமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று திரிபுரா சென்றடைந்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரிபுரா சென்றடைந்த குடியரசுத் தலைவரை முதல்வர் பிப்லால் மற்றும் துணை முதல்வர் ஜிஷ்னு தேவ் பர்மன் ஆகியோர் அகர்தால் விமான நிலையத்தில் வரவேற்றனர்.


அரசுமுறை பயணமாக இன்று திருபுரா விஜயம் செய்யும் அவருக்கு, குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அவர் திருபுரா பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.



அதே வேலையில், குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் அவர் விஜயம் செய்யும் 26-வது மாநிலம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இப்பயணத்தின் நிகழ்ச்சியாக இன்று மட்டபாரி மற்றும் சப்ரூம் ஆகிய நகரங்களை இணைக்கும் உதயபூர் தேசிய நெடுஞ்சாலையினை திறந்து வைக்கின்றார். பின்னர் உதயபூர் மட்டபாரி கோவில் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகின்றார்.


இன்று மாலை திருபுரா அரசால் ஏற்படுத்துப்பட்டுள்ள அரசுமுறை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றார்.


நிகழ்ச்சிகள் முடிவடைந்தப் பின்னர் நாளை காலை அவர் டெல்லி திரும்புகின்றார்.