டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை குறித்த புத்தகமான ‘Dr Babasaheb Ambedkar: Vyakti Nahin Sankalp’ -ன் முதல் பதிப்பினை குடியரசு தலைவர் பெற்றுக்கொண்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, அவரது வாழ்க்கை சம்பந்தப்பட்ட புத்தகமான ‘Dr Babasaheb Ambedkar: Vyakti Nahin Sankalp’  இன்று வெளியிடப்பட்டது.


டெல்லி ராஸ்ட்ரதி பவனில் நடைப்பெற்ற இந்த புத்தக வெளியிட்டு விழாவில், புத்தக்கத்தினை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் வழங்க குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் பெற்றுக்கொண்டார்.



நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர் தெரவிக்கையில், டாக்டர் மார்டின் லூத்தர் கிங்-ன் மறு உருவமே டாக்கர் அம்பேத்கர் அவர்கள். அவரின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் நம் அனைவருக்கும் ஒரு பாடம் கற்றுத் தரும் என தெரிவித்துள்ளார்.


மேலும் இன்று வழங்கப்பட்டுள்ள இந்த புத்தகமானது சிறிய அளவில் இருந்தாலும், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆளுமை ஆகியவற்றின் தொகுப்புகளை கொண்டு கருத்தியல் அளவில் பெரியதாகவே தெரிகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.