மாநில மற்றும் யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நாளை டெல்லி ஜனாதிபதி மாளிகையில் தொடங்குகிறது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நாளை (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முக்கி பிரச்சினைகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது. 


மாநாட்டின் தொடக்க நிகழ்வுகளுக்கு பின் 2-வது அமர்வில் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இதையடுத்து, பிரதமர் மோடி சிறப்புரை நிகழ்த்துகிறார்.


மூன்றாவது அமர்வில்: மாநில பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பொருட்களில் விவாதங்கள் நடக்கிறது. 4-வது அமர்வில் ராஜ்யபால் அறிக்கை மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கவர்னர்கள் விவாதிக்கின்றனர்.


இதையடுத்து இம்மாநாட்டின் 5-வது அமர்வனாது செவ்வாக்கிழமை நடிபெருகிறது. 5-வது அமர் மகாத்மா காந்தியின் 150–வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்த விவாதமும், 6–வது மற்றும் இறுதி அமர்வில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவர்னர்கள் அறிக்கை சமர்பித்தல் நிகழ்வு இடம்பெறும். இந்த அமர்வில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை, வெளியுறவுத்துறை மந்திரிகளும் உரையாற்றுகின்றனர்.


இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச கவர்னர்களுடன், மத்திய மந்திரிகளும் கலந்து கொள்கிறனர்!