புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த படம் ஒரு ஆடர் லவ். அந்த படத்தின் இடம் பெற்றுள்ள பாடல் மாணிக்ய மலரே பூவி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பாடல் யூடியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது.
 
இவருக்கு தமில், மலையாள, இந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு. அவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.


இதை தொடர்ந்து, பிரியா பிரகாஷ் வாரியரை போன்றே விளையாட்டாக கண் அடித்து பலர் சமூக வலை தளத்தில் வீடியோ வெளியிடுகிறார்கள்.


இந்நிலையில், கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவிகள் வகுப்பில் அதே வேலையை செய்கிறார்களாம். தகவல் அறிந்த ஆசிரியர்கள் 


மேலிடத்திற்கு தகவல் கொடுக்க, அப்படி செய்பவர்கள் மீது ஒரு வருட சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிக்கை அனுப்பியுள்ளார்களாம். இதனால் மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.