புதுச்சேரி: கோகொனட் துறைமுகம் (Coconut Harbour) அருகே படகு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை தீ விபத்து (Fire Accident) ஏற்பட்டது. எட்டு தீ அணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், தீக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இந்த தீ விபத்துக்கான காரணத்தை அறிய முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதற்கிடையில், தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலத்தில் (Srisailam), அணையின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நிலத்தடி நீர்மின் நிலையத்தில் (Hydroelectric Power Station) தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் வியாழக்கிழமை பின்னிரவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு ஷார்ட் சர்கியுட் இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த இடத்தில் கடும் புகை மூட்டம் உள்ளது என்றும் ஆரம்ப கட்ட அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.


ALSO READ: தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீசைலம் மின் நிலையத்தில் தீ விபத்து; 9 ஊழியர்கள் சிக்கி தவிப்பு


தெலுங்கானா அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி மற்றும் டி.எஸ். ஜென்கோ சி.எம்.டி பிரபாகர் ராவ் ஆகியோர் சம்பவ இடத்தை அடைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகின்றனர். மின்நிலையத்தின் முதல் பிரிவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், நான்கு பேனல்கள் சேதமடைந்துள்ளதாகவும் ரெட்டி கூறினார். அடர்த்தியான புகை காரணமாக மீட்புப் படையினர் சுரங்கப்பாதையில் நுழைய முடியவில்லை என்று அவர் கூறினார். மீட்புப் பணிகளை ஆதரிப்பதற்காக சிங்காரேனி கோலீரியிலிருந்து மீட்புப் பணியாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீசைலம் அணை கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது, இது தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் எல்லையாக செயல்படுகிறது.


(புதுச்சேரி தீ விபத்து குறித்த பிற விவரங்கள் மேலும் எதிர்பார்க்கப்படுகின்றன.)


ALSO READ: விருதுநகர் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து!! வெடித்துச் சிதறிய பட்டாசுகள்!! தப்பிய Petrol Bunk!!