புதுச்சேரி: கொரோனா பராமரிப்பு மையங்களை அமைக்க தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் வளாகத்தில் கோவிட் -19 பராமரிப்பு மையங்களை (சி.சி.சி) அமைக்க ஒத்துழைப்பை வழங்கவில்லை என யூனியன்பிரதேசத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை குற்றம் சாட்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிராந்திய லெப்டினன்ட் ஆளுநருக்கும், முதலமைச்சர், சுகாதார அமைச்சர், தலைமை செயலாளர் மற்றும் சுகாதார செயலாளருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார இயக்குநர் எஸ் மோகன் குமார் அதிகாரப்பூர்வ கடிதம் எழுதியுள்ளார்.


Also Read | virtual flower showவாக மக்களைக் கவரும் 124வது ஊட்டி மலர் கண்காட்சி


தனியார் மருத்துவக் கல்லூரிகளில் COVID-19 Care Centres (CCCs) மையங்களை நிறுவ வேண்டும் என்பதை மத்திய சுகாதார அமைச்சகம் கட்டாயப்படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.


"புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளை சி.சி.சி.களாக ஈடுபடுத்தி நெருக்கடியை சமாளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக தற்போதைய தொற்று நெருக்கடியை நிர்வகிப்பதில் யூனியன் பிரதேசம் ஒரு முக்கியமான மற்றும் கடுமையான சூழ்நிலையில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.


Also Read | பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை பற்றிய அரிய தகவல்கள்


திருமண மண்டபங்கள் மற்றும் ஆடிட்டோரியங்களில் கோவிட் பராமரிப்பு மையங்களை அமைப்பதை விடம் தனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுவது உகந்ததாக இருக்கும் என்றும்   லெப்டினன்ட் கவர்னர் மற்றும் பிறருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


மக்களின் உயிரைக் காப்பாற்ற ஒத்துழைப்பைக் தனியார் கல்லூரிகளிடம் பேசி இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டுமென அவர் உயர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.


Read Also | கணித மேதை 'சகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும்


மத்திய சுகாதார அமைச்சின் இணை செயலாளருக்கும் சுகாதாரத் துறை யூனியன் பிரதேச அரசு எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அரசு மருத்துவமனையான இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், மத்திய அரசின் நிர்வாகத்தில் இயங்கும் ஜிப்மரும் இப்போது கோவிட் -19 மருத்துவமனைகளாக செயல்பட்டு வருகின்றன. அதேபோல, அரசாங்கத்தால் நடத்தப்படும் மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் வேறொரு தனியார் மருத்துவக் கல்லூரி ஆகியவை கோவிட் பராமரிப்பு மையங்களாக செயல்படுகின்றன.