புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவைக்கான இலாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவருடன் சேர்த்து 6 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடந்த மாதம் 27ஆம் தேதியன்று முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.


முதலமைச்சர் ரங்கசாமி தன்வசம் 13 துறைகளை வைத்துக் கொண்டுள்ளார். சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியம் என முக்கியத்துறைகள் அவரிடம் உள்ளன.



என்.ஆர். காங்கிரஸை சேர்ந்த அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு பொதுப்பணித்துறை, விமானப் போக்குவரத்து, சட்டத்துறை, மீன்வளத்துறை, அச்சகத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.


Also Read | Puducherry: புதுவை யூனியன் பிரதேசத்தில் 5 அமைச்சர்கள் பதவியேற்பு


அமைச்சர் தேனி சி.ஜெயக்குமாருக்கு, வேளாண், கால்நடைத்துறை, வனத்துறை, சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் என சில அமைச்சக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 


அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு, ஆதி திராவிடர் நலன், போக்குவரத்து, வீட்டுவசதித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, கலை-கலாச்சாரம் ஆகிய அமைச்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


உள்துறை, மின்சாரத்துறை, தொழில்-வர்த்தகம், கல்வித்துறையை ஏ.நமசிவாயம் பார்த்துக் கொள்வார். அமைச்சர் சாய் ஜெ.சரவணக்குமாருக்கு நுகர்பொருள் வழங்கல், ஊரக வளர்ச்சித்துறை, சிறுபாமையினர் நலன், சமூக மெமெம்பாடு, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


Also Read | புதுச்சேரியில் N.R.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றார்


Also Read | Puducherry: புதுவை சபாநாயகர் நாற்காலியை முதன்முறையாக அலங்கரிக்கும் பாஜக எம்.எல்.ஏ


Also Read | AINRC-BJP கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் அமைச்சரவை விரிவாக்கம் என்னவாகும்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR